12 19
உலகம்செய்திகள்

இந்திய-பாகிஸ்தான் போர் நிறுத்தம் குறித்து எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

Share

பாகிஸ்தானும் இந்தியாவும், 2025 மே 18 வரை தற்போதைய போர் நிறுத்தத்தை நீடிப்பதற்கு இணங்கியதாக பாகிஸ்தான் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான இசாக் டார் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய டார், இரண்டு நாடுகளின் இராணுவத்தினரும் முன்னதாகவே தொடர்பு கொண்டு, போர் நிறுத்தத்தை நீடிக்கும் முடிவை எட்டியதாகவும், அதைத் தொடர்ந்து அரசியல் உரையாடலைத் தொடர திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

போர் நிறுத்த ஒப்பந்தம் முதலில் மே 10 முதல் மே 12 வரை நீடிக்கும் என்று ஒப்புக் கொள்ளப்பட்டது. பின்னர் அது மே 14 வரை நீடிக்கப்பட்டது, இப்போது மே 18 வரை நீடிக்கப்பட்டது என்று அவர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் குறிப்பிட்டுள்ளார்.

போர் நிறுத்தத்தை பராமரிப்பதில் இதுவரை இராணுவ அளவிலான தகவல் தொடர்பு முக்கிய பங்கு வகித்துள்ளது. இந்தநிலையில் மே 18 க்குப் பின்னர், விரிவான அரசியல் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகும் என்று டார் கூறியுள்ளார்.

இந்தியக் கட்டுப்பாட்டில் உள்ள காஸ்மீரில் அமைந்துள்ள பஹல்காமில் கடந்த மாதம் அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகளால் 26 பொதுமக்கள் கொல்லப்பட்ட துப்பாக்கித் தாக்குதலுக்குப் பதிலடியாக, மே 7 ஆம் திகதி அதிகாலையில் பாகிஸ்தானில் உள்ள பல இலக்குகள் மீது இந்தியா வான்வழித் தாக்குதல்களை நடத்திய போது இரண்டு நாடுகளுக்கும் இடையில் பதற்றங்கள் அதிகரித்தன.

இதனையடுத்து இரண்டு நாடுகளுக்கும் இடையில் இடம்பெற்ற கடுமையான சண்டையைத் தொடர்ந்து, மே 10 அன்று இரண்டு தரப்பினரும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டனர்.

Share

Recent Posts

தொடர்புடையது
25 69149dba7d420
உலகம்செய்திகள்

முதுகலை, முனைவர் பட்ட மாணவர்களுக்கான கல்வி அனுமதி நடைமுறை இலகுபடுத்தப்பட்டது – மாகாண சான்றளிப்பு இனித் தேவையில்லை!

எதிர்வரும் 2026ஆம் ஆண்டு முதல் சர்வதேச மாணவர்கள் கல்வி அனுமதிகளைப் பெறும் முறையை கனடா இலகுவாக்க...

MediaFile 2 2
செய்திகள்இலங்கை

கெஹல்பத்தர பத்மே வாக்குமூலத்தின் அடிப்படையில்: முன்னணி நடிகை ஒருவர் விரைவில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்படலாம்!

கைது செய்யப்பட்டுத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக் குழு உறுப்பினர் கெஹல்பத்தர பத்மே வழங்கிய வாக்குமூலத்தின்...

25 69148ab688d8c
செய்திகள்உலகம்

அமெரிக்காவிற்குத் திறமையான தொழிலாளர்கள் தேவை: H-1B விசா கட்டண உயர்வுக்குப் பின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு!

தனது நாட்டிற்கு வெளிநாடுகளில் இருக்கும் திறமையான தொழிலாளர்கள் மற்றும் சிறப்புத் திறன்களைக் கொண்டவர்கள் தேவை என...

1747801591 RAMITH 6
இலங்கைசெய்திகள்

நாகரிகமற்ற செயல்: ரூ. 296 மில்லியன் சொத்துக் குவிப்பு வழக்கில் பிணையில் வந்த கெஹெலியவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகனும், முன்னாள் தனிப்பட்ட செயலாளருமான ரமித் ரம்புக்வெல்ல, நீதிமன்றத்திற்கு வெளியே...