20 7
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் புலம்பெயர்ந்தவர்களுக்கு ஏற்பட்டுள்ள அபாயம்: அதிகரிக்கப்படும் பாதுகாப்பு

Share

பிரித்தானியாவில் புலம்பெயர்ந்தவர்களுக்கு ஏற்பட்டுள்ள அபாயம்: அதிகரிக்கப்படும் பாதுகாப்பு

பிரித்தானியாவில் (UK) புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிராக தீவிர வலதுசாரி அமைப்பினர் கலவரத்தில் ஈடுபடுவதைக் கட்டுப்படுத்துவதற்காக முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பிரித்தானியாவில் பல்வேறு நகரங்களில் புலம்பெயர்தலுக்கு எதிா்ப்பு தெரிவித்து வலதுசாரிகள் கடந்த வாரம் நடத்திய போராட்டம் கலவரமாக வெடித்தது.

அதனை தொடர்ந்து, வன்முறைகளில் ஈடுபட்ட 400 இற்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டனர்.

இதேவேளை, கலவரங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer) இரண்டாவது முறையாகவும் அமைச்சர்கள் உட்பட மூத்த காவல்துறை அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்து கோப்ரா கூட்டத்தை நடத்தினார்.

இந்த நிலையில், புதிய ஆா்ப்பாட்டக் கூட்டங்களுக்கு வலதுசாரி அமைப்பினர் அழைப்பு விடுத்துள்ளதால் மீண்டும் கலவரம் ஏற்படுவதைத் தடுப்பதற்காக ஆயிரக்கணக்கான காவல்துறையினர் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், புலம்பெயர்தலுக்கு ஆதரவான வழக்கறிஞர்கள் மற்றும் அவா்கள குடியிருப்புகளுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...