வடகொரியாவின் ஏவுகணை சோதனையால் பதற்றம்

tamilnih 29

வடகொரியாவின் ஏவுகணை சோதனையால் பதற்றம்

வடகொரியா தனது தொடர் ஏவுகணை சோதனையால் கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை ஏற்படுத்திவருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதனால் தங்களது பாதுகாப்பு கருதி தென்கொரியாவும், ஜப்பானும் அமெரிக்காவுடன் இணைந்து கூட்டுப்போர் பயிற்சியில் ஈடுபடுகின்றன.

குறித்த கூட்டுப்போர் பயிற்சி தங்களுக்கு எதிரான போர் ஒத்திகை என கருதும் வடகொரியா இந்த பயிற்சியை கைவிட வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனை பொருட்படுத்தாத தென்கொரியா அமெரிக்காவுடன் இணைந்து மீண்டும்கூட்டுப்போர் பயிற்சியில் ஈடுபட்டுவருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அப்போது போர் விமானங்களை இடைமறித்து தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளில் ஈடுபட்டதாக தென்கொரிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version