கடந்த 24 மணிநேரத்தில் பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் காரணமாக 37 ஆயிரத்து 11 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், அத்துடன் 68 பேர் பலியாகியுள்ளனர்.
உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் பரவலால் அதிக பாதிப்பை எதிர்கொண்ட ஐந்தாவது நாடாக பிரித்தானியா காணப்படுகிறது.
இந்த நிலையில், இங்கு இதுவரை மொத்தமாக 69 லட்சத்து 78ஆயிரத்து 128 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 229 பேர் பலியாகியுள்ளனர் .
அத்துடன் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள 12 லட்சத்து 35 ஆயிரத்து 322 பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
Leave a comment