1725045 pop
உலகம்செய்திகள்

பெண்களுக்கு முக்கிய பொறுப்புக்கள்! – போப் பிரான்சிஸ் தகவல்

Share

வாடிகன் நிர்வாகத்தில் பெண்களுக்கு முக்கிய பொறுப்புகளை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக போப் பிரான்சிஸ், ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

பிஷப்களை தேர்வு செய்யும் குழுவில் தற்போது ஆண்கள் மட்டுமே இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், இக்குழுவில் பெண்களுக்கு வாய்ப்பளிக்க விரும்புவதாகத் தெரிவித்தார்.

விரைவில் இக்குழுவில் 2 பெண்கள் இடம் பெறுவார்கள் என்றும் இதன்மூலம் இந்த பாதையில் வழிகள் கொஞ்சம் திறக்கப்படுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார். எனினும், இதற்கான முடிவு இன்னும் அதிகாரப்பூர்வமாக எடுக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வாடிகனின் நிர்வாகத் துறைகளில் பெண்களுக்கு முக்கிய பங்கு அளிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்த போப் பிரான்சிஸ், வாடிகனின் நீதி மற்றும் அமைதிக்கான துறையின் 2ம் நிலை தலைவராக சகோதரி அலீஸ்ஸாந்தரா ஸ்மெரில்லி கடந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

#WorldNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...