கண்ணீருடன் பாட்டு பாடி மகளுக்கு பிரியா விடை கொடுத்த இளையராஜா!

ilaiyarajad 1706196637

கண்ணீருடன் பாட்டு பாடி மகளுக்கு பிரியா விடை கொடுத்த இளையராஜா!

இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரிணி கேன்சரால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் இலங்கையில் மரணமடைந்தார்.

அவரது உடல் நேற்று இந்தியா கொண்டுவரப்பட்டு, இன்று தேனியில் இறுதி சடங்குகள் நடைபெற்றது.

இன்று பவதாரிணியின் உடல் அடக்கம் செய்யும் முன்பு குடும்பத்தினர் எல்லோருக்கும் கண்ணீருடன் பாட்டு பாடி விடை கொடுத்து இருக்கின்றனர்.

“மயில் போல பொண்ணு ஒன்னு” என்ற பாடலை இறுதியாக மகளுக்காக இளையராஜா கண்ணீருடன் பாடி இருப்பது எல்லோரையும் கலங்க வைத்து இருக்கிறது.

Exit mobile version