இஸ்ரேலிய இராணுவத்தின் இரு மூத்த அதிகாரிகள் பணி நீக்கம்

24 661060a1564c9

இஸ்ரேலிய இராணுவத்தின் இரு மூத்த அதிகாரிகள் பணி நீக்கம்

இஸ்ரேலிய இராணுவத்தின் இரண்டு மூத்த அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அண்மையில் காசா பகுதியில் போரினால் பாதிக்கப்பட்ட பாலஸ்தீன மக்களுக்கு உணவு விநியோகம் செய்யும் சர்வதேச உதவி நிறுவனம் ஒன்றின் பணியாளர்கள் 7 பேர் காரில் பயணித்த நிலையில் அவர்கள் மீது இஸ்ரேலிய இராணுவம் தாக்குதல் நடத்தியிருந்தது.

தனது நிறுவன ஊழியர்கள் பயணித்த கார் மீது இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினரின் தாக்குதலை அந்நிறுவனத்தின் தலைவர் உறுதி செய்ததையடுத்து, இஸ்ரேல் பாதுகாப்புப் படையினரின் விசாரணையின் பின்னர் இரு அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இஸ்ரேல் அந்த நடவடிக்கையை எடுப்பதற்கு முன், சமீபத்தில் இரு தரப்புக்கும் இடையே ஒரு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இஸ்ரேல் அங்கு வருத்தம் தெரிவித்தாலும், இது பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் அளிக்கும் முயற்சி மட்டுமே என்று சர்வதேச நிவாரண நிறுவனம் கூறியுள்ளது.

Exit mobile version