உலகம்செய்திகள்

YouTube பார்த்து இயற்கை முறையில் பிரசவம் பார்த்த கணவர்! இளம்பெண் பரிதாப பலி

Share

YouTube பார்த்து இயற்கை முறையில் பிரசவம் பார்த்த கணவர்! இளம்பெண் பரிதாப பலி

தமிழகத்தில் யூடியூப் பார்த்து இயற்கை முறையில் பிரசவம் பார்த்ததால் இளம்பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீப காலங்களில் பலருக்கு இயற்கை மீதான ஆர்வம் அதிகமாகி வருகிறது. கர்ப்பிணி பெண்கள் அனைவருக்கும் இயற்கை முறையில் பிரசவம் ஆக வேண்டும் என்பதே ஆசையாக இருக்கும். வேறு வழி இல்லாத காரணத்தினால் மட்டுமே செயற்கை மருத்துவத்தை நாடுகின்றனர்.

அதுமட்டுமல்லாமல், அழகுக்குறிப்புகள் முதல் உடல்நிலை பிரச்சனை வரை யூடியூப் பார்த்து தான் அதற்கான தீர்வினை பார்த்துக் கொண்டிருக்கிறோம். அந்தவகையில், தற்போது சிலர் மருத்துவமனைக்கு செல்லாமல் இயற்கை முறையில் எப்படி பிரசவம் ஆக வேண்டும் என்பது பற்றிய குறிப்புகளை யூடியூபில் பார்க்கின்றனர்.

தமிழகம், தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தை அடுத்த அனுமந்தபுரம் கிராமத்தை சேர்ந்த மாதேஷ் (27) என்பவருக்கும், போச்சம்பள்ளியை அடுத்த புளியம்பட்டி கிராமத்தை சேர்ந்த லோகநாயகி (27) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இவர்கள், இருவரும் இயற்கை மீதான ஆர்வம் கொண்டவர்கள். மேலும், இவர்கள் இருவருமே வேளாண்மை பட்டப்படிப்பு படித்தவர்கள். இந்நிலையில், லோகநாயகி கர்ப்பமானதையடுத்து தனது வீட்டிலேயே இயற்கை முறையில் பிரசவம் ஆக வேண்டும் என்று கணவரிடம் கூறியதாக கூறப்படுகிறது.

இதனால், இயற்கை முறையில் எப்படி குழந்தை பெற்றுக்கொள்வது என்று யூடியூபில் பார்த்துள்ளனர்.

இந்நிலையில், லோகநாயகிக்கு நேற்று காலை வலி வந்துள்ளது. அப்போது, பேசியபடியே யூடியூப் பார்த்து கணவர் மாதேஷ் மனைவிக்கு பிரசவம் பார்த்துள்ளார். அப்போது, அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.

பின்னர், லோகநாயகிக்கு திடீரென ரத்தப்போக்கு அதிகமாகி மயக்கமானார். இதனையடுத்து, அவரை போச்சம்பள்ளியில் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே லோகநாயகி இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து மாதேஷிடம் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இயற்கை முறையில் பிரசவம் பார்த்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
images 3 1
உலகம்செய்திகள்

ஜெர்மனியில் அதிர்ச்சி: மருத்துவமனையில் பணிச்சுமை காரணமாக 10 நோயாளிகளைக் கொலை செய்த ஆண் தாதிக்கு ஆயுள் தண்டனை!

ஜெர்மனியில் உள்ள ஊர்செலன் (Ürselen) நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில், 2020ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த...

images 4 1
செய்திகள்இந்தியா

தமிழ்நாடு இலங்கைத் தமிழர்களுக்கு உடனடியாக வாக்களிக்கும் உரிமை மற்றும் குடியுரிமை வழங்கு: மத்திய அரசுக்கு எஸ். ராமதாஸ் வலியுறுத்தல்!

தமிழ்நாட்டில் பல தசாப்தங்களாக வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழ் ஏதிலிகளுக்கு (Refugees) வாக்களிக்கும் உரிமை மற்றும்...

25 6909cc0a3b1bf
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சங்குப்பிட்டி கொலை: பிரதான சந்தேகநபர் தவில் வித்துவான் அல்ல – இசை வேளாளர் இளைஞர் பேரவை விளக்கம்!

பூநகரி – சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்துடன் கைது செய்யப்பட்ட பிரதான...

25 690c956ec39eb
இலங்கைசெய்திகள்

திருகோணமலை கண் பரிசோதனை நிலையத்தில் தீ விபத்து: மின் ஒழுக்கு காரணமெனத் தகவல்!

திருகோணமலைத் துறைமுகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, திருகோணமலை பொது வைத்தியசாலையின் அருகாமையில் உள்ள ஒரு தனியார் கண்...