அமெரிக்காவில் பனி உறைந்த சாலையில் சறுக்கி நூற்றுக்கணக்கான வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளாகின.
அமெரிக்கா- விஸ்கான்சின் நகர நெடுஞ்சாலையில் உறைந்து கிடந்த பனியில் சாலையில் சறுக்கி நூற்றுக்கணக்கான வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
கார்கள், கண்டெய்னர் லொரிகள் சரிவர பிரேக் பிடிக்காமல் தாறுமாறாக ஓடி ஒன்றன் பின் ஒன்றாக மோதி தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து அருகில் இருந்த வாகனங்களில் மளமளவென தீ பரவி கொளுந்து விட்டு எரியத் தொடங்கியது. பற்றி எரிந்த தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்த பொலிஸார், விபத்துக்குள்ளான கார்கள் உள்ளிட்ட வாகனங்களை மீட்கும் பணியிலும் ஈடுபட்டனர்.
#WoldNews
Leave a comment