துபாயில் உள்ள மியூசியம் ஒன்றில் மனித உருவில் ரோபோ ஒன்றை ஊழியராக அறிமுகப்படுத்தியுள்ளார்.
ஒஃப் ஃபியூசர்( Museum Of Future)என்ற அருங்காட்சியகத்தில் நவீன முறையில் ரோபோ அமேகா என்ற பெயரிடப்பட்டடுள்ளது.
இந்த ரோபோவை அருங்காட்சியகத்தில் ஊழியர்களின் ஒருவராக நிர்வாகம் அறிவித்துள்ளது.
அமேகா ரோபோவின் வீடியோ அவர்களின் சமூக வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
அமேகா பல மொழிகளில் பேசும் தன்மையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் வெளியூரிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மியூசியம் ஒஃப் ஃபியூசர், வெளியிட்டுள்ள வீடியோவில், அமேகா அருங்காட்சியக ஊழியருடன் எமிராட்டி மொழியில் உரையாடுகிறது
. உலகின் மிகவும் அதிநவீனமாக மனித உருவ ரோபோ மியூசியம் ஒஃப் ஃபியூசருடன் இணைந்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அமேகா ரோபோவின் வீடியோ சமூக வலைதளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
#Robot #Dubai