செங்கடலில் நடத்தப்படும் தாக்குதலை கட்டுப்படுத்த அமெரிக்கா வியூகம்

tamilni 353

செங்கடலில் நடத்தப்படும் தாக்குதலை கட்டுப்படுத்த அமெரிக்கா வியூகம்

செங்கடல் பகுதியில் ஹவுதி கிளர்ச்சியாளர்களினால் நடத்தப்படும் தாக்குதலை தடுக்க அமெரிக்கா புதிய திட்டத்தை உருவாக்கி உள்ளது.

அதன்படி சுமார் 10 நாடுகளை இணைத்து படையை உருவாக்கி செங்கடலில் கண்காணிப்பில் ஈடுபடுத்த அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

ஏமனில் செயல்படும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேல்- ஹமாஸ் போரில் ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக உள்ளனர். இவர்கள் செங்கடல் பகுதியில் சென்ற வணிக கப்பல்கள் மீது ட்ரோன்கள், ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

எனவே இந்த தாக்குதலை முடிவுக்கு கொண்டுவரும் பட்சத்தில் அமெரிக்கா புதிய நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க பாதுகாப்பு மந்திரி லாயிட் ஆஸ்டின் தெரிவிக்கையில்,

செங்கடல் பகுதியில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். இது ஒரு சர்வதேச சவாலாகும். இதற்கு புதிய பன்னாட்டு பாதுகாப்பு முயற்சியை அறிவித்துள்ளோம்.

இதற்கான பணியில் அமெரிக்காவுடன் இங்கிலாந்து, பக்ரைன், கனடா, பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து, நார்வே, ஸ்பெயின், சீஷெல்ஸ் ஆகிய நாடுகள் இணையும். சில நாடுகள் கூட்டு ரோந்து பணியை நடத்தும். மற்றவை தெற்கு செங்கடல் மற்றும் ஏமன் வளைகுடாவில் உளவுத்துறை ஆதரவை வழங்கும் என தெரிவித்துள்ளார்.

Exit mobile version