24 6658f6c02807b
உலகம்செய்திகள்

ஈரான் நோக்கி சென்றுகொண்டிருந்த சரக்கு கப்பல் மீது ஹவுதி தாக்குதல்

Share

ஈரான் நோக்கி சென்றுகொண்டிருந்த சரக்கு கப்பல் மீது ஹவுதி தாக்குதல்

ஈரானுக்கு (Iran) தானியங்கள் ஏற்றிச்சென்ற கப்பல் மீது ஹவுதி தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கிரிஸ் (Greece) நாட்டைச் சேர்ந்தவருக்கு சொந்தமான மார்ஷல் தீவின் கொடியுடன் சென்ற கப்பலே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளது.

இதனால் கப்பல் சேதமாகி, தண்ணீர் கப்பலுக்குள் சென்றது. ஆனால், கப்பலில் இருந்த மாலுமிகளுக்கு ஆபத்து ஏதும் நேரவில்லை.

இந்த நிலையில் லாக்ஸ் என்ற தாக்குதலுக்கு உள்ளான கப்பல் ஈரானுக்கு தானியங்கள் ஏற்றி சென்றது எனத் தெரியவந்துள்ளது.

கப்பல் முழுவதும் தானியங்கள் நிரம்பியிருந்த நிலையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஹவுதி குழுவுக்கு ஈரான்தான் முழு ஆதரவு கொடுத்து வருகிறது.

இந்த நிலையில் ஆதரவு அளித்த நாட்டிற்கு தானியங்கள் கொண்டு சென்ற கப்பல் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.

மேலும், கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து செங்கடல் மற்றும் ஏடன் வளைகுடாவில் செல்லும் கப்பல் மீது தாக்குதல் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
25 1
இலங்கைசெய்திகள்

வரலாறு காணாத உச்சத்தை எட்டிய தங்கத்தின் விலை

உலகில் தங்கத்தின் விலை முதல் முறையாக ஒரு அவுன்ஸ் 4,000 அமெரிக்க டொலரை தாண்டியுள்ளது. இத்தகவலை...

24 1
இலங்கைசெய்திகள்

எண்பது மில்லியனுக்கு விற்கப்பட்ட நாடாளுமன்ற ஆசனம்

இலங்கையின் நாடாளுமன்ற ஆசனத்தை எண்பது மில்லியன் ரூபாய்க்கு விற்ற நபர் ஒருவர் குறித்து விசாரணைகள் நடத்தப்பட்டு...

23 1
இலங்கைசெய்திகள்

மின் கட்டண திருத்தம் குறித்து இன்று முக்கிய நகர்வு

இலங்கை மின்சார சபை (CEB), இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணையத்திடம் (PUCSL) சமர்ப்பித்த மின்சார கட்டண...

22 1
இலங்கைசெய்திகள்

பேருந்தில் பாடசாலைக்கு சென்ற மாணவனுக்கு மர்ம நபரால் ஏற்பட்ட விபரீதம்

பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த 12 வயது சிறுவனின் வாயில் வலுக்கட்டாயமாக மாத்திரையை திணித்துவிட்டு நபரொருவர் தப்பிச்சென்ற...