உறவினர்கள் இறந்தால் விடுமுறை வழங்கப்படுவது அனைத்து நாடுகளிலும் உள்ள வழமையான நடைமுறையாகும்.
அதற்கும் ஒருபடி மேலே போய் கொலம்பியா அரசு வித்தியாசமான விடுமுறை ஒன்றை நடைமுறைப்படுத்தவுள்ளது.
இந் நாடு, செல்லப் பிராணிகள் இறந்துவிட்டால், இறுதிச் சடங்குக்காக ஊழியர்களுக்கு 2 நாள் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க திட்டமிட்டுள்ளது.
குழந்தை இல்லாத தம்பதிகள் செல்லப் பிராணிகளையே குழந்தைகளாக பார்ப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என கொலம்பியா லிபரல் கட்சி உறுப்பினர் அலெஜான்ட்ரோ கார்லோஸ் சாக்கோ தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட செல்லப் பிராணிகள் உயிரிழந்தால் ஊழியர்களுக்கு விடுமுறை கிடையாது எனவும் செல்லப் பிராணிகள் உயிரிழந்து விட்டன என பொய் சொல்லுமிடத்து அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
Leave a comment