ezgif 3 5126aa70b6
உலகம்செய்திகள்

துருக்கியில் கனமழை – 100-க்கும் மேற்பட்ட வாகனங்களை அடித்து சென்றது வெள்ளம்

Share

துருக்கியில் கடந்த சில நாட்களாகவே பலத்த மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் துருக்கியின் தெற்கு மாகாணமான கும்லூகா பகுதியில் கனமழை கொட்டித் தீர்த்தது.

ஒரே இரவில் தொடர்ந்து பெய்த மழை காரணமாக அங்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழை காரணமாக 100-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்தன.

மேலும் வெள்ளத்தின் வேகத்தில் சில பாகங்களும் இடிந்து விழுந்தன. மழையின் வெள்ளத்துக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த 100-க்கும் மேற்பட்ட கார்களும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.

மேலும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட போது கார்கள் ஒன்றோடொன்று மோதி உருக்குலைந்து காணப்பட்டன. வெள்ளத்தின் காரணமாக பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் அவர்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது. மேலும் அங்கு பள்ளிக்கூடங்களும் மூடப்பட்டுள்ளன.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
p0n6jgg8
செய்திகள்உலகம்

ஈரான் மீதான தாக்குதல்: உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள கடும் பாதிப்புகள்

கடந்த பிப்ரவரி 28-ம் தேதி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து மேற்கொண்ட கூட்டுத்...

26 69b351d688c88
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத இலத்திரனியல் பொருட்கள் மீட்பு: பொலிஸார் தீவிர விசாரணை

யாழ்ப்பாணப் பகுதியில் அனுமதி இன்றி சட்டவிரோதமான முறையில் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த இலத்திரனியல் பொருட்கள் தொகுதி ஒன்றை...

20 12
செய்திகள்இந்தியா

இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர்: ஆகஸ்ட் மாதம் நிவாரண நிதி திரட்டும் போட்டிகள்!

கடந்த நவம்பர் மாதம் இலங்கையைத் தாக்கிய ‘டித்வா’ (Ditwah) சூறாவளியால் ஏற்பட்ட பெரும் பாதிப்புகளிலிருந்து மீண்டு...

19 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி: இன்றைய நிலவரம்!

இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தின் தரவுகளின்படி, கடந்த சில நாட்களாக நிலவிய ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில்,...