ஐக்கிய அரபு நாட்டில் கன மழை! – அணைகள் திறப்பு

1745029 dubai

வளைகுடா நாடுகளில் பாலைவனங்கள் அதிகம் என்பதால் கடும் வெயில் வாட்டி வதைக்கும். கோடை காலங்களில் வெயிலின் அளவு உச்சத்தை எட்டும். எப்போதாவது பலத்த மழை பெய்யும்.

குறித்த பகுதிகளில், மழை காலத்தில் லேசான மழை பெய்யும். சில நேரங்களில் கனமழையும் பெய்து மக்களை மகிழ்விக்கும்.

அந்த வகையில் ஐக்கிய அரபு நாட்டில் கடந்த சில வாரங்களாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

கனமழை காலங்களில் மழை நீரை சேமித்து வைக்க ஐக்கிய அரபு நாட்டில் ஆங்காங்கே அணைகள் கட்டப்பட்டுள்ளன. தற்போது பெய்து வரும் மழை காரணமாக ஐக்கிய அரபு நாட்டில் உள்ள பெரும்பாலான அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது.

இந்த நிலையில் இங்கு அடுத்த ஒரு வாரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. அப்போது அணைகளுக்கு மேலும் நீர் வர வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து ஐக்கிய அரபு நாட்டில் உள்ள வுராயா, ஷவ்கா, புராக், சிப்னி, அல்அஜிலி, அஸ்வானி, மம்தூஹ் ஆகிய 7 அணைகள் திறக்கப்பட்டு உள்ளன.

#world

Exit mobile version