2 9 scaled
உலகம்செய்திகள்

அவர்கள் குடும்பங்களை ஒழிப்போம்… பணயக்கைதிகளை குறிப்பிட்டு இஸ்ரேலுக்கு மிரட்டல் விடுத்த ஹமாஸ்

Share

அவர்கள் குடும்பங்களை ஒழிப்போம்… பணயக்கைதிகளை குறிப்பிட்டு இஸ்ரேலுக்கு மிரட்டல் விடுத்த ஹமாஸ்

காஸா மீது இஸ்ரேல் தொடர்ந்து குண்டுவீசி தாக்குதல் நடத்தினால், பணயக் கைதிகளின் குடும்பங்கள் கொல்லப்படுவார்கள் என்று ஹமாஸ் படைகள் பகீர் மிரட்டலை விடுத்துள்ளனர்.

ஹமாஸ் ஆயுதப்பிரிவின் சமூக ஊடக பக்கத்தில் குறித்த மிரட்டல் வாசகம் வெளியிடப்பட்டுள்ளது. அதில் மக்கள் கூட்டமாக தொலைக்காட்சியை உற்று நோக்குவது போலவும், திரையில் இஸ்ரேல் வான் தாக்குதலில் பணயக்கைதிகள் கொல்லப்படுவது போலவும் சித்தரிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து அரேபிய மொழியிலும் ஹீப்ரூவிலும் பதிவிடப்பட்டுள்ளது, அதில் தங்களிடம் பணயக்கைதியாக இருந்த இஸ்ரேல் மக்கள் அந்த நாட்டின் வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர் என குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால் இந்த அச்சுறுத்தலானது இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அவரது கண்மூடித்தனமான காஸா தாக்குதலையும் இலக்காகக் கொண்டது என்றே கூறப்படுகிறது.

நெதன்யாகு போரை மீண்டும் முன்னெடுக்க விரும்பினால், இது போன்ற செய்திகளுக்கு தயாராக வேண்டும் எனவும் ஹமாஸ் எச்சரித்துள்ளது. ஹமாஸ் படைகளின் இந்த அச்சுறுத்தலானது போர் தொடங்கி 112வது நாள் வெளியாகியுள்ளது.

கடந்த அக்டோபர் 7ம் திகதி இஸ்ரேல் எல்லையை கடந்து ஹமாஸ் படைகள் முன்னெடுத்த திடீர் தாக்குதலில் 1000 பேர்கள் வரையில் கொல்லப்பட்டனர். அத்துடன் 240 பேர்கள் பணயக்கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர்.

அவர்களில் 105 பேர்கள் பல கட்டங்களாக விடுவிக்கப்பட்டனர். எஞ்சியவர்கள் தற்போதும் ஹமாஸ் காவலில் உள்ளனர். சிலர் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற அச்சமும் எழுந்துள்ளது.

ஆனால் அதற்கு இஸ்ரேலின் நடவடிக்கைகளே காரணம் என ஹமாஸ் குற்றஞ்சாட்டியுள்ளது. மட்டுமின்றி, பணயக்கைதிகளை மீட்கும் எந்த முயற்சியும் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு முன்னெடுக்கவில்லை என இஸ்ரேல் மக்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இன்னொரு போர் நிறுத்த ஒப்பந்தம் முன்னெடுக்கப்படாது என நெதன்யாகு அறிவித்துள்ள நிலையில், எஞ்சிய பணயக்கைதிகளை விடுவிப்பது சாத்தியமல்ல என்றும் ஹமாஸ் படைகள் பதிலளித்துள்ளன.

Share
தொடர்புடையது
world 86
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பூசா சிறையில் கொலைச் சதி? மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணை!

பரத லக்ஷ்மன் பிரேமச்சந்திராவின் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, பூசா உயர் பாதுகாப்புச் சிறையில்...

world 85
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அபாயகரமான வாகன ஓட்டுநர்களைப் பிடிக்க புதிய வாட்ஸ்அப் எண்: வீடியோ ஆதாரங்களை அனுப்பக் காவல்துறை வேண்டுகோள்!

இலங்கையில் அதிகரித்து வரும் சாலை விபத்துகளைக் கட்டுப்படுத்தவும், பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு எதிராக உடனடி...

world 83
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைக்குக் கடந்த மார்ச் மாதத்தில் வெளிநாட்டுப் பணப்பரிமாற்றம் அதிகரிப்பு!

இலங்கை மத்திய வங்கி (CBSL) வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, கடந்த 2026 மார்ச் மாதத்தில் புலம்பெயர்...