13 25
உலகம்செய்திகள்

ஹமாஸ் தலைவர் கொலை தொடர்பில் இஸ்ரேல் வழங்கியுள்ள பகிரங்க தகவல்

Share

கடந்த ஜூலை மாதம் ஈரானில் (Iran) ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேவை, இஸ்ரேல் (Israel) தாமே கொன்றதாக முதல் முறையாக பகிரங்கமாக ஒப்பு கொண்டுள்ளது.

ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு விடுக்கும் எச்சரிக்கையாக இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் குறித்த பகிரங்க அறிவிப்பை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், “இந்த நாட்களில், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஒரு தெளிவான செய்தியை தெரிவிக்க விரும்புகிறேன்.

நாங்கள் ஹமாஸை தோற்கடித்து விட்டோம். ஹிஸ்புல்லாவை தோற்கடித்தோம், ஈரானின் பாதுகாப்பு அமைப்புகளையும் அழித்துவிட்டோம். உற்பத்தி முறைகள், சிரியாவில் அசாத் ஆட்சியை வீழ்த்தி விட்டோம், கடுமையான தாக்குதலை நடத்தியுள்ளோம்.

மேலும், ஏமனில் உள்ள ஹவுதி அமைப்பு, எங்கள் கடுமையான தாக்குதலின் வரிசையில் கடைசியாக நிற்கிறது” என்று கூறியுள்ளார்.

கடந்த ஜூலை 31ஆம் திகதி அன்று ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியானின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள தெஹ்ரான் சென்றிருந்த போது ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே படுகொலை செய்யப்பட்டார்.

ஈரானிய மற்றும் பாலஸ்தீனிய அதிகாரிகள் இந்த படுகொலைக்கு இஸ்ரேல் மீது குற்றம் சாட்டிய போதும் இஸ்ரேலிய அதிகாரிகள் அதன் பற்றி உறுதிப்படுத்தவோ மறுக்கவோ இல்லை.

இந்நிலையில், தற்போது, ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எச்சரிக்கை விடுப்பதற்காக குறித்த கொலையை ஒப்புக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 47
செய்திகள்இந்தியா

டெல்லி AI உச்சி மாநாடு: கடைசி நேரத்தில் பின்வாங்கிய பில் கேட்ஸ்! – எப்ஸ்டீன் விவகார சர்ச்சை காரணமா?

டெல்லியில் நடைபெற்று வரும் ‘இந்திய செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாட்டில்’ (India AI Impact...

image 1200x800 45
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் அதிரடி! – ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் கைது; எப்ஸ்டீன் விவகாரத்தில் அரசு ரகசியங்களை கசியவிட்டாரா?

பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான தொடர்புகள் மற்றும் பொது அலுவலகத்தில் தவறான நடத்தையில் ஈடுபட்டதாக எழுந்த...

image 1200x800 44
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தலைமன்னார் – இராமேஸ்வரம் கப்பல் சேவை மீண்டும்? – 310 மீட்டர் நீளத்தில் புதிய இறங்குதுறை அமைக்கத் திட்டம்!

இலங்கையையும் இந்தியாவையும் இணைக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க தலைமன்னார் இறங்குதுறையை (Jetty) நவீனமயமாக்குவதற்கான முதற்கட்ட மேம்பாட்டுத் திட்டம்...