rtjy 308 scaled
உலகம்செய்திகள்

இஸ்ரேலுக்கு எதிராக துருக்கி கண்டனம்

Share

இஸ்ரேலுக்கு எதிராக துருக்கி கண்டனம்

காசாவில் பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களுக்கு துருக்கி கடும் கண்டணத்தை வெளியிட்டுள்ளது.

இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களை கண்டித்த துருக்கி ஜனாதிபதி எர்டோகன், ஹமாஸ் தாயகத்தை பாதுகாக்கும் போராளிகள் குழு என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இஸ்லாமிய நாடுகளுக்கு அவர் அழைப்பு ஒன்றையும் விடுத்துள்ளார்.

இந்நிலையில் ஹமாஸ் அமைப்பை ‘‘பயங்கரவாதிகள்” என இஸ்ரேல், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அறிவித்துள்ளன.

இதற்கமைய இரு தரப்பு மோதலிலும் பலியானோர் எண்ணிக்கை இதுவரை 7,000ஐ தாண்டியுள்ளது.

3வது வாரமாக நீடித்து வரும் இந்தப் போரில், காசாவுக்குள் புகுந்து இஸ்ரேல் தரைவழி தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில், இஸ்ரேலை கண்டித்துள்ள துருக்கி ஜனாதிபதி எர்டோகன் ஹமாஸை போராளிகள் அமைப்பு என கூறியுள்ளார். ஏற்கனவே போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்த எர்டோகன், தனது கட்சியின் நாடாளுமன்ற குழு கூட்டத்தில் இஸ்ரேலை மீண்டும் ஒருமுறை கண்டித்துள்ளார்.

அவர் பேசும்போது, ‘இஸ்ரேலிய மக்களுடன் துருக்கிக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. ஹமாஸ் ஒரு பயங்கரவாதக் குழு அல்ல, ஆனால் தாயகத்தைப் பாதுகாக்கும் போராளிகளின் குழு.

மேலும் இந்த போரில் இஸ்ரேலின் ஏவுகணைத் தாக்குதல்கள் மற்றும் இஸ்ரேல் மீதான ஏவுகணைத் தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும்’ என்றார்.

Share
தொடர்புடையது
10 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விலை அதிகரிப்பு: மயூரு நெத்தி குமாரகேவின் விளக்கம் மற்றும் பின்னணி

நாட்டில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டமைக்கான காரணங்கள் குறித்து இலங்கை பெற்றோலிய களஞ்சிய முனைய நிறுவனத்தின் முகாமை...

09 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மோட்டார் வாகன இலக்கத் தகடு அச்சிடும் பணி: புதிய நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்து!

நீண்ட காலமாகத் தேக்கமடைந்திருந்த மோட்டார் வாகனங்களுக்கான இலக்கத் தகடுகளை அச்சிடும் பணியை மீண்டும் ஆரம்பிப்பதற்கான ஒப்பந்தம்,...

08 9
உலகம்செய்திகள்

லெபனானில் போர் மோதல் தீவிரம்: சுமார் 7 லட்சம் மக்கள் இடம்பெயர்வு!

லெபனானில் தற்போது இடம்பெற்று வரும் கடுமையான போர் மோதல்கள் காரணமாக, சுமார் 7 லட்சம் மக்கள்...

07 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விலையேற்றம்: பாடசாலை மாணவர் போக்குவரத்து கட்டணம் 5 சதவீதத்தால் உயர்வு!

எரிபொருள் விலையில் மேற்கொள்ளப்பட்ட திடீர் மாற்றத்தைத் தொடர்ந்து, இன்று (மார்ச் 10) முதல் அமுலுக்கு வரும்...