சாதனை படைக்க வயது மற்றும் இழப்புக்கள் தடையல்ல தன்னம்பிக்கை மட்டும் போதுமானது என்பதை நிரூபித்திருக்கிறார் மாற்றுத்திறனாளி ஒருவர்.
அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி ஒருவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
23 வயதான சீயோன் கிளார்க் என்பவரே இச் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
இவர் இரு கால்களை இழந்த நிலையில் உடலின் மேல் பாகங்களை மட்டும் பயன்படுத்தி 4.78 செக்கண்டில் 20 மீற்றர் வரை தனது கைகளால் விரைவாக நடந்து சாதனை படைத்துள்ளார்.
இச் சாதனைக்கான சான்றிதழை கின்னஸ் நிறுவனம் வழங்கியுள்ளது.
2024 ஒலிம்பிக் போட்டியில் மல்யுத்தம் மற்றும் சக்கர நாற்காலி பந்தய விளையாட்டுகள் இரண்டிலும் பங்கேற்கும் முதல் அமெரிக்க தடகள வீரராக வேண்டும் என்பதே இவரது குறிக்கோளாகும்.
Leave a comment