தங்கம் விலை வரலாறு காணாத உச்சம்! ஒரு அவுன்ஸ் $4,955 ஆக உயர்வு: அடுத்த இலக்கு $5,400?

will gold prices touch 5000 gold price hits all time high near 4725 whats fueling golds golden run

உலகளாவிய பொருளாதார மாற்றங்களுக்கு மத்தியில், சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் புதிய வரலாற்று உச்சத்தைத் தொட்டுள்ளது.

இன்று ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,955.74 அமெரிக்க டொலராகப் பதிவாகியுள்ளது. இது தங்கத்தின் வரலாற்றில் பதிவான அதிகூடிய விலையாகக் கருதப்படுகிறது.

முன்னணி முதலீட்டு வங்கியான கோல்ட்மேன் சாக்ஸ் (Goldman Sachs) வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில், இந்த விலை உயர்வு இத்துடன் நிற்காது எனவும், 2026 ஆம் ஆண்டு இறுதிக்குள் ஒரு அவுன்ஸ் தங்கம் 5,400 அமெரிக்க டொலர் வரை உயர வாய்ப்புள்ளதாகவும் கணித்துள்ளது.

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த அதிரடி விலை உயர்வு காரணமாக, இலங்கை உள்நாட்டு சந்தையிலும் தங்கத்தின் விலையில் இன்று மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

24 கரட் மற்றும் 22 கரட் தங்கத்தின் விலைகள் இன்று பல ஆயிரம் ரூபாய்களால் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகச் சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உலகளாவிய ரீதியில் நிலவும் பொருளாதார நிச்சயமற்ற தன்மை மற்றும் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாகத் தங்கத்தைத் தேர்ந்தெடுப்பதே இந்த விலை ஏற்றத்திற்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.

சர்வதேச சந்தையில் தங்கம் விலை $5,000-ஐ நெருங்கி வருவதால், நகை வியாபாரிகள் மற்றும் முதலீட்டாளர்கள் மத்தியில் ஒருவித பதற்றமான சூழல் நிலவி வருகின்றது.

 

 

Exit mobile version