தெற்கு சூடானின் மேற்கு கோர்டோபான் மாநிலத்தில் தங்கச் சுரங்கம் ஒன்று இடிந்து விழுந்ததில் 38 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூடானின் தலைநகர் கார்ட்டூமுக்கு மேற்கே 500 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மேற்கு கோர்டோபான் மாநிலத்தில் உள்ள எல் நுஹுத் நகருக்கு அருகில் உள்ள தங்கச் சுரங்கமே இவ்வாறு இடிந்து விழுந்துள்ளது.
இதேவேளை இடிந்து விழுந்த தங்கச் சுரங்கமானது செயல்படாத நிலையில் இருந்த நிலையில், சுரங்கத்தில் சென்று சிலர் தங்கம் எடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது தங்கச் சுரங்கமானது இடிந்து விழுந்துள்ளது.
இறந்தவர்களைத் தவிர குறைந்தது 08 பேர் காயமடைந்ததாகவும் அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இதேவேளை கடந்த 2020 ஆம் ஆண்டில் கிழக்கு ஆப்பிரிக்க நாடான சூடான் 36.6 தொன் தங்கங்களை உற்பத்தி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
#WorldNews
Leave a comment