ஆப்கானிஸ்தானில் தற்கொலை குண்டுதாரிகளின் குடும்பத்தினருக்கு தலிபான்களால் பரிசில்கள் வழங்கப்பட்டு வருகிற நடவடிக்கை சர்வதேச அளவில் ஆச்சரியத்தை ஏற்படுத்தயுள்ளது.
ஆப்கானின் படைகள் மற்றும் அமெரிக்கப் படைகளுக்கு எதிராக மேற்கொண்ட தற்கொலைக்குண்டுதாரிகளின் குடும்பத்தினதினரை ஊக்குவிக்கும் முகமாக தலிபான்ககளால் பரிசில்கள் வழங்கப்பட்டு வருகிறது.
ஆப்கானிஸ்தாலிருந்து கடந்த ஓகஸ்ட் மாதத்தின் இறுதிப் பகுதியில், அமெரிக்கப் படையினர் வெளியேறியிருந்தனர்.
இதனையடுத்து ஆப்கானிஸ்தானின் ஆட்சி தலிபான்களின் வசமானது.
இந்நிலையில் அமெரிக்காப் படையினர் ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டிருந்த காலப்பகுதிகளில், அவர்கள் மீதும், ஆப்கானிஸ்தான் படையினர் மீதும் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை நடாத்திய தலிபான்களுக்கு வெகுமதியளிக்கும் பொருட்டு, உயிரிழந்த தலிபான்களின் குடும்பங்களுக்கு, தலிபான் ஆட்சியாளர்களால் வெகுமதியளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கமைய தற்கொலைத் தாக்குதல்களை மேற்கொண்ட தலிபான் இயக்கத்தைச் சேர்ந்தோரின் குடும்பத்தினருக்கு தலா 10 ஆயிரம் ஆப்கான் நாணயங்களை வழங்கவும், அக்குடும்பங்களுக்கு சொந்த நிலத்தை வழங்கவும் தலிபான் ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இச்சம்பவம் மனித உரிமை அமைப்புக்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
#WORLD
Leave a comment