உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் பொதுத் தேர்தல் எப்போது? பிரதமர் ரிஷி சுனக் வெளிப்படை

Share
OIP 14
Share

பிரித்தானியாவில் பொதுத் தேர்தல் எப்போது என்பது தொடர்பில் பிரதமர் ரிஷி சுனக் முதல் முறையாக உறுதியான பதில் அளித்துள்ளார்.

ஆண்டின் இரண்டாவது பாதியில் பொதுத் தேர்தல் முன்னெடுக்கலாம் என்ற திட்டத்தில் இருப்பதாக பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். உள்ளாட்சித் தேர்தல்கள் முன்னெடுக்கப்படும் மே மாதத்தில் தேர்தலை அவர் அறிவிக்க வாய்ப்பிருப்பதாக சமீபத்திய வாரங்களில் தகவல் வெளியாகி வந்தது.

இந்த நிலையில், மக்கள் ஒரு மாற்றத்திற்காக காத்திருக்கும் நிலையில், தேர்தலை வேண்டும் என்றே ரிஷி சுனக் தள்ளிப்போடுவதாக தொழிலாளர் கட்சி தலைவர் சர் கீர் ஸ்டார்மர் குற்றம் சாட்டினார்.

நாடும் தொழிலாளர் கட்சியும் தேர்தலுக்கு தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், மக்களை எதிர்கொள்ள திராணியற்று ரிஷி சுனக் பிரதமர் இல்லத்தில் பதுங்கியிருக்கிறார் என்று லிபரல் டெமாக்ரட் தலைவர் சர் எட் டேவியும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

உண்மையில் பொதுத் தேர்தல் என்பது 2025 ஜனவரி 28ம் திகதி முன்னெடுக்கப்பட வேண்டும். ஆனால் இந்த ஆண்டு மே மாதத்தில் தேர்தலை முன்னெடுக்க வேண்டும் என்று லிபரல் டெமாக்ரட் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.

இந்த நிலையில், மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்றும், பொருதார நிலைமைகளை சீரமைத்து, பொதுமக்களு வரிச்சலுகை அளிக்கவும் போதுமான அவகாசம் தேவைப்படுவதாகவும் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.

Share
Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...