போர் நிறுத்தத்திற்கு பச்சைக்கொடி காட்டிய இஸ்ரேல்

tamilni 340

போர் நிறுத்தத்திற்கு பச்சைக்கொடி காட்டிய இஸ்ரேல்

இஸ்ரேலுக்குக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையில் நடைபெறும் போரானது தீவிரமடைந்து வரும் நிலையில், போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த மதம் 7ஆம் திகதி தொடக்கம் நடைபெற்று வரும் இஸ்ரேல்-ஹமாஸ் போருக்கு மத்தியில் 50 பணயக்கைதிகளுக்கு ஈடாக 4 நாள் போர் நிறுத்தத்திற்கான முன்மொழிவை நாடாளுமன்றம் நிறைவேற்றி உள்ளது.

ஹமாஸ் தரப்பில் இருந்து விடுவிக்கப்படும் பணயக் கைதிகளில் பெரும்பாலானவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று இஸ்ரேலிய அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அவர்கள் ஒவ்வொரு நாளும் 12-13 பணயக்கைதிகள் கொண்ட குழுக்களாக விடுவிக்கப்படுவார்கள் எனவும் கூறியுள்ளார்.

Exit mobile version