4 ஆண்டுகளின் பின்னர் நாடு திரும்பிய பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர்

tamilni 256

4 ஆண்டுகளின் பின்னர் நாடு திரும்பிய பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர்

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் பாகிஸ்தானில் இருந்து வெளியேறி லண்டனில் குடியேறிய நிலையில் நேற்று(21) வாடகை விமானம் மூலம் நாடு திரும்பியுள்ளார்.

நவாஸ் ஷெரீப்புக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் பல்வேறு ஊழல் வழக்குகளில் சிறை தண்டணை வழங்கப்பட்ட அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல நீமன்றம் பிணையில் விடுதலை வழங்கியது.

இதனால் இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு 2019 இல் சென்ற நவாஸ் ஷெரீப், அங்கு சிகிச்சை பெற்றார். விடுதலை காலம் முடிந்த பிறகும் அவர் பாகிஸ்தான் திரும்பவில்லை.

இதற்கிடையே இந்த ஆண்டு தொடக்கத்தில் இம்ரான்கான் தலைமையிலான அரசு கவிழ்க்கப்பட்ட நிலையில் நவாஸ் ஷெரீப்பின் தம்பி ஷெபாஸ் ஷெரீப் பிரதமர் ஆனார்.

இதையடுத்து நவாஸ் ஷெரீப் லண்டனில் இருந்து பாகிஸ்தானுக்கு திரும்புவார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

பொருளாதார சிக்கலில் பாகிஸ்தான் தவித்து வரும் நிலையிலும், பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையிலும் நவாஸ் ஷெரீப் சொந்த நாடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version