5 8 scaled
உலகம்செய்திகள்

முன்னாள் உலக அழகி போட்டியாளருக்கு 26வது வயதில் நேர்ந்த சோகம்

Share

முன்னாள் உலக அழகி போட்டியாளருக்கு 26வது வயதில் நேர்ந்த சோகம்

முன்னாள் உலக அழகி போட்டியாளரான ஷெரிகா டி அர்மாஸ் தனது 26வது வயதில் காலமானார். ஷெரிகா கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயால் இறந்தார்.

உலக அழகி போட்டியில் உருகுவே சார்பில் ஷெரிகா பங்கேற்றார். அவர் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயுடன் போராடினார்.

கீமோதெரபி மற்றும் கதிரியக்க சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால் பலன் இல்லை. இறுதியாக அக்டோபர் 13 (2023) அன்று புற்றுநோயுடன் போராடி மிக இளம் வயதிலேயே ஷெரிகா காலமானார்.

ஷெரிகாவின் மரணத்தை அவரது சகோதரர் மேக் டி அர்மாஸ் சமூக ஊடக தளங்களில் வெளிப்படுத்தினார். அவர் 2015-ல் மிஸ் உருகுவே கிரீடத்தை வென்றார் என்பது அறியப்படுகிறது.

இவரது மரணம் உருகுவேயை மட்டுமின்றி உலகம் முழுவதையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. உருகுவே மிஸ் யுனிவர்ஸ் 2022 கார்லா ரோமெரோ ஷெரிகாவின் மரணம் பற்றி பேசியுள்ளார். அவர் இந்த உலகத்திற்காக எவ்வளவோ செய்துள்ளார், என் வாழ்க்கையில் நான் சந்தித்த மிக அழகான பெண்களில் ஷெரிகாவும் ஒருவர்.

மேலும், உன்னை என்றும் மறக்க மாட்டோம் என்று அவரது நண்பர்கள் கண்ணீருடன் வெளிப்படுத்தினர். உங்கள் பாசத்தையும் உங்களுடன் நாங்கள் பகிர்ந்து கொண்ட மகிழ்ச்சியையும் எப்போது நினைவு கூர்வோம்’ என்று கூறினார்.

சீனாவில் நடந்த 2015ம் ஆண்டு உலக அழகி போட்டியின் போது பேட்டி ஒன்றில் பேசிய ஷெரிகா, அது அழகு மாடலாக இருந்தாலும், விளம்பர மாடலாக இருந்தாலும், கேட் வாக் மாடலாக இருந்தாலும், தனக்கு எப்போதும் மாடலாக இருக்கவே பிடிக்கும் என்று கூறியுள்ளார். ஃபேஷன் சம்மந்தமான எல்லாமே தனக்கு பிடிக்கும் என்றார். பிரபஞ்ச அழகி போட்டியில் கலந்து கொள்வதில் எந்தப் பெண்ணும் மகிழ்ச்சி அடைவார்கள் என்று அவர் தனது கருத்தை தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...