4 8 scaled
உலகம்செய்திகள்

6 வயது சிறுவனை 26 முறை கத்தியால் குத்திக்கொன்ற 71 வயது முதியவர்! போரினால் நேர்ந்த கொடூரம்

Share

6 வயது சிறுவனை 26 முறை கத்தியால் குத்திக்கொன்ற 71 வயது முதியவர்! போரினால் நேர்ந்த கொடூரம்

அமெரிக்காவில் 71 வயது முதியவர் ஒருவர் 6 வயது சிறுவனை கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சிகாகோவைச் சேர்ந்த ஜோசப் எம்.சூபா எனும் 71 வயது முதியவர், பக்கத்துக்கு வீட்டிற்குள் திடீரென கத்தியுடன் நுழைந்துள்ளார். அங்கு இருந்த பெண் மற்றும் அவரது 6 வயது மகனை கத்தியால் குத்தியுள்ளார்.

சிறுவனின் தாயார் படுகாயமடைந்த நிலையில், சிறுவனை 26 முறை கொடூரமாக குத்தியுள்ளார் ஜோசப். அப்போது அவர், ‘முஸ்லீம்களே நீங்கள் சாக வேண்டும்’ என்று கூச்சலிட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். கத்தியால் குத்தப்பட்ட தாய் – மகன் இருவரும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளார். அவனது தாய்க்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இஸ்ரேல்- பாலஸ்தீனிய போரை அன்றே கணித்த பாபா வாங்கா: இனி நடக்கவிருக்கும் விபரீதம் இது தான்!
இஸ்ரேல்- பாலஸ்தீனிய போரை அன்றே கணித்த பாபா வாங்கா: இனி நடக்கவிருக்கும் விபரீதம் இது தான்!
கொலையாளியை பொலிஸார் கைது செய்துள்ள நிலையில், அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

உயிரிழந்த சிறுவனின் பெயர் Wadea Al-Fayoume என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் இராணுவ பாணியிலான பாரிய கத்தியால் குத்திக் கொல்லப்பட்டுள்ளார்.

தி வில் கவுண்டி ஷெரிப் அலுவலகம் இந்த சம்பவம் குறித்து அறிக்கை ஒன்றை சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளது.

அதில், ‘இந்த கொடூர தாக்குதலில் பாதிக்கப்பட்ட இருவரும் முஸ்லீம்கள் என்பதாலும், ஹமாஸ் மற்றும் இஸ்ரேலியர்களுக்கு இடையே நடந்து வரும் மத்திய கிழக்கு மோதல்கள் காரணமாகவும் சந்தேக நபரால் குறி வைக்கப்பட்டுள்ளனர் என்பதை துப்பறிவாளர்களால் கண்டறிய முடிந்தது’ என கூறப்பட்டுள்ளது.

இச்சம்பவத்திற்கு ஜனாதிபதி ஜோ பைடன் கடும் கண்டனமும், வேதனையும் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கையில், ‘யாரையும் வெறுப்பதற்கு அமெரிக்காவில் இடமில்லை. 6 வயது சிறுவன் கொடூரமாக கொல்லப்பட்டதையும், அவரது தாய் மீது கொலை முயற்சி நடந்ததையும் அறிந்து நானும் ஜில்லும் அதிர்ச்சியடைந்தோம்’ என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...