பல நாடுகளில் ஆபத்தில்!! ரஷ்யாவுக்கு ஜெலென்ஸ்கி கண்டனம்
ரஷ்யாவின் செயலால் உலகம் முழுவதும் உணவு பஞ்சம் ஏற்படும் அபாயம் இருப்பதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி கண்டனம் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் ரஷ்யா போர் நடவடிக்கை தொடங்கிய பிறகு ஐக்கிய நாடுகள் சபை மற்றும் துருக்கி மேற்கொண்ட பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு உக்ரைன் ரஷ்யா இடையே சமரசம் ஏற்படுத்தப்பட்டு கருங்கடல் வழியாக தானிய ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது.
இந்த ஒப்பந்தம் நேற்றுடன் காலாவதியான நிலையில், தானிய ஏற்றுமதிக்கான ஒப்பந்தத்தை ரஷ்யா புதுப்பிக்க மறுப்பு தெரிவித்துவிட்டது, இதனை தொடர்ந்து ரஷ்யாவின் முடிவுக்கு உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார்.
கண்டனம் தெரிவித்து ஜெலென்ஸ்கி வெளியிட்ட தனது அறிக்கையில், உக்ரைனின் தானியங்களை நம்பி எகிப்து, சூடான், ஏமன், வங்கதேசம், இந்தோனேசியா, துருக்கி, இந்தியா மற்றும் ஆப்பிரிக்கா போன்ற பல நாடுகளை சேர்ந்த 40 கோடி மக்கள் உள்ளன.
உணவு தானிய விநியோகத்தை தடுக்க ரஷ்யாவிற்கு எந்த அதிகாரமும் உரிமையும் இல்லை, ரஷ்யாவின் இந்த மிரட்டலுக்கு உலக நாடுகள் நிச்சயம் அடிபணிய கூடாது.
எதேச்சதிகாரமான ரஷ்யாவின் நடவடிக்கைக்கு எதிராக துணிச்சலான அனைத்து நடவடிக்கைகளையும் உலக நாடுகள் மேற்கொள்ள வேண்டும்.
ஆசியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் தங்களுக்கான உணவு விநியோகத்தை தடையின்றி கோர முழு உரிமை உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில் உக்ரைனில் இருந்து தானிய ஏற்றுமதியை தொடர பிற நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது.
தற்போது தானிய ஏற்றுமதி ஒப்பந்தத்தில் இருந்து ரஷ்யா விலகி இருக்கும் நிலையில், உக்ரைனில் இருந்து தானியங்களை எடுத்து வரும் பணியில் எந்த கப்பல் நிறுவனங்களும் பங்கேற்காது.
எனவே பேச்சுவார்த்தைகள் மூலம் சுமுகமான முடிவு ஏட்டப்படுவதே ஒரே வழி என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
Leave a comment