trudeau singh
உலகம்செய்திகள்

கனடாவின் உயரிய அங்கீகாரத்தை பெறும் இந்திய தொழிலதிபர்: யார் இவர்?

Share

கனடா நாட்டின் உயரிய அங்கீகாரங்களின் ஒன்றான ‘Order of Canada’ பதவியை இந்திய தொழிலதிபர் ஒருவர் பெறுகிறார்.

இந்தியாவில் பிறந்த பிர்தௌஸ் கராஸ் (Firdaus Kharas) என்ற தொழிலதிபர் கனடா நாட்டின் உயரிய பதவியான ‘ஆர்டர் ஆஃப் கனடா’ அதிகாரி பதவியில் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இவருக்கு, மனிதநேயத்தை மையமாக வைத்து ஊடக செயல்பாட்டின் மூலம் சமூக மாற்றத்தை விதைத்ததற்கு இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக கனடா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடா நாட்டின் உயரிய அங்கீகாரங்களின் ஒன்றான ‘Order of Canada’, மிக சிறப்பாகவும், நீடிக்க கூடிய பங்களிப்புகளை ஆற்றியவர்களுக்காகவும் வழங்கக்கூடியது.

கனடா நாட்டின் கவர்னர் ஜெனரல் மேரி சைமன், உயர்மட்ட அதிகார குழுவுக்கு 15 அதிகாரிகள், ஒரு கௌரவ அதிகாரி, 59 உறுப்பினர்களை நியமனம் செய்த அறிவிப்பை வெளியிட்டார்.

இது தொடர்பாக பிர்தௌஸ் கராஸ் கூறுகையில், “கனடா நாட்டின் இந்த அங்கீகாரத்தை பெறுவதில் நெகிழ்ச்சியடைகிறேன். கனடாவில் குடியேறிய எனக்கு இந்த பதவி அர்த்தம் நிறைந்ததாக உள்ளது.

பார்ஸி சமூகம் சாதிக்க கூடியதாகா உள்ளதால், இன்னும் நிறைவளிக்க கூடியதாக உள்ளது” என்றார். பிர்தௌஸ் கராஸ் ஒரு அனிமேஷன் மற்றும் படங்கள் சார்ந்த தயாரிப்பாளர் ஆவார்.

இவரது படைப்புகள் இந்தியா உள்பட 198 நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. மேலும், 125 -க்கும் மேற்பட்ட விருதுகளை இவர் பெற்றுள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...