மாஸ்கோ தாக்குதல்…. 4,000 உக்ரைன் கைதிகளின் உயிர் ஊசல்
மாஸ்கோ மீதான ஐ.எஸ் தாக்குதலை திசை திருப்பி, ரஷ்ய சிறையிலிருக்கும் உக்ரைன் கைதிகள் 4,000 பேர்களுக்கு விளாடிமிர் புடின் மரண தண்டனை விதிக்கலாம் என நிபுணர் ஒருவர் எச்சரித்துள்ளார்.
மாஸ்கோ தாக்குதலுக்கு உக்ரைன் தான் காரணம் என ரஷ்யா தரப்பில் வாதிட்டு வரும் நிலையிலேயே 4,000 கைதிகளின் உயிர் ஊசலில் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த நெருக்கடியான நிலையை பயன்படுத்தி விளாடிமிர் புடின் மீண்டும் மரண தண்டனையை அமுலுக்கு கொண்டுவரலாம் என்றும், உக்ரைன் கைதிகளுக்கு எதிராக பயன்படுத்த வாய்ப்பிருப்பதாகவும் கவலை எழுந்துள்ளது.
இதனிடையே ரஷ்ய நிபுணர் ஒருவர் தெரிவிக்கையில், மாஸ்கோ தாக்குதலானது முழுமையான ஐ.எஸ் தாக்குதல் போன்று இல்லை என்றும், இது ரஷ்யாவுக்குள் திட்டமிடப்பட்ட தாக்குதலாகவே தென்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்பட்ட கொலைவெறித் தாக்குதல் ரஷ்ய ஜனாதிபதியை மோசமான முடிவெடுக்கவும் தூண்டலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
மட்டுமின்றி, மரண தண்டனையை மீண்டும் அமுலுக்கு கொண்டுவரும் பொருட்டு, ரஷ்ய அரசாங்கமே இந்த தாக்குதலை ரகசியமாக முன்னெடுத்திருக்கலாம் என்றும் அவர் சந்தேகம் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா மீண்டும் மரண தண்டனையை அமுலுக்கு கொண்டுவந்தால், உக்ரைன் மொற்றொரு மிக மோசமான நெருக்கடியை எதிர்கொள்ளும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது 4,000 உக்ரைன் கைதிகள் ரஷ்யாவில் சிறையில் உள்ளனர். அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் பொருட்டும், மாஸ்கோ தாக்குதலை அனுமதித்திருக்கலாம் என நிபுணர் தரப்பில் சந்தேகம் எழுப்பப்படுகிறது.
இதன் பொருட்டே, விளாடிமிர் புடினின் நெருங்கிய வட்டாரத்தில் பலரும் தற்போது மரண தண்டனை தொடர்பில் கருத்து தெரிவித்து வருவதையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.