கனடாவில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய தொழில்நுட்பம் : சிக்கப்போகும் பலர்

24 662a8b3a49699

கனடாவில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய தொழில்நுட்பம் : சிக்கப்போகும் பலர்

கனடாவின் எல்லைப் பாதுகாப்புப் பிரிவினர் புதிய தொழில்நுட்பம் ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எல்லைப் பாதுகாப்பின் போது ஆட்களை இனங்காண முக அடையாளத் தொழில்நுட்பம் (facial recognition) தொலைபேசி ஊடாக பயன்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

முக அடையாளத் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதன் மூலம் எல்லைப் பகுதிகளில் நேரத்தை சேமிக்க முடியும் எனவும் பயணிகளின் நேரத்தை இதன் மூலம் சேமிக்க முடியும் என எல்லைப் பாதுகாப்பு பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்வதற்காக 25 மில்லியன் டொலர்கள் வரையில் செலவிடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகளின் கடவுச்சீட்டில் உள்ள புகைப்படம், பயனர்களின் தொலைபேசியில் எடுக்கப்பட்ட செல்பியுடன் (Sefie) ஒப்பீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version