சீனாவில் இருந்து செயல்பட்டு வந்த சுமார் 500இற்கும் மேற்பட்ட போலிமுகநூல் கணக்குகளை முகநூல் Meta Platforms, அடையாளம் கண்டு முடக்கியுள்ளது.
குறித்த கணக்குகளில் கொவிட் ஆரம்பம் பற்றிய போலி தகவல் பரப்புகைகள் இடம்பெற்றதாக தெரியவருகிறது.
சுவிஸ் உயிரியலாளர் வில்சன் எட்வர்ட்ஸ் என்ற பெயரிலேயே இவ்வாறான போலி முகநூல் கணக்குகள் உருவாக்கப்பட்டுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
போலி முகநூல் கணக்குகளின் உள்ளடக்கங்கள் சீன ஊடகங்கள் மூலம் பரப்பப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின்றன.
தொடர்ந்து இவ்வாறான போலி முகநூல்கணக்குகளையும் சிக்கலை ஏற்படுத்தகூடிய கணக்குகளையும் இந்நிறுவனம் முடக்கி வருவது குறிப்பிடத்தக்கது.
#WorldNews
Leave a comment