1776970 minee1
உலகம்செய்திகள்

சுரங்கத்தில் வெடி விபத்து! – 25 பேர் உயிரிழப்பு

Share

துருக்கியில் கருங்கடல் பகுதி அருகே அமைந்துள்ள பர்டின் மாகாணத்தின் அம்சரா நகரில் அமைந்துள்ள நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் 25 பேர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த நிலக்கரி சுரங்கத்தில் வேலை செய்துகொண்டிருந்தநிலையில், நிலக்கரி சுரங்கத்தில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.

இதில் வேலை செய்துகொண்டிருந்த பலரும் சிக்கிக்கொண்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் சுரங்கத்தில் சிக்கிய 50-க்கும் மேற்பட்டோர் உயிருடன் மீட்டனர்.

இந்நிலையில், நிலக்கரி சுரங்க வெடிவிபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. மேலும், சுரங்கத்திற்குள் சிக்கிய எஞ்சியோரை மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என தெரிகிறது.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
12 5
இலங்கைசெய்திகள்

WhatsApp பயன்படுத்தும் பயனர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கையில் அண்மைய காலமாக WhatsApp ஊடாக மேற்கொள்ளப்படும் மோசடி மற்றும் ஹேக்கிங் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாக...

11 5
இந்தியாசெய்திகள்

அழுத்தத்தில் தவெக – விஜயின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: உள்ளே நுழையும் மோடி அரசு

தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜயின் பாதுகாப்பு குளறுபடி இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறித்த விடயம்...

13 5
இந்தியாசெய்திகள்

சாரதி அனுமதி பத்திர விநியோகத்தில் ஏற்படவுள்ள பாரிய மாற்றம்

சாரதி அனுமதி பத்திரங்கள் செல்லுபடியாகும் காலத்தை 8 ஆண்டுகளில் இருந்து அதிகரிக்க போக்குவரத்து அமைச்சு திட்டமிட்டுள்ளது....

10 5
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டு மோகம் காட்டி மோசடி! மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

இஸ்ரேலில் விவசாய வேலை வாய்ப்புகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதாகக் கூறி சில தனிநபர்கள் அல்லது குழுக்கள் சமூக...