8 41 scaled
உலகம்செய்திகள்

விலை உயரும்… உக்ரைன் தொடர்பில் ஐரோப்பிய நுகர்வோர் மீது புதிய மிரட்டலை விடுத்த ரஷ்யா

Share

விலை உயரும்… உக்ரைன் தொடர்பில் ஐரோப்பிய நுகர்வோர் மீது புதிய மிரட்டலை விடுத்த ரஷ்யா

உக்ரைன் வழியாக ரஷ்ய எரிவாயு போக்குவரத்து தொடர்பில் ஒப்பந்தத்தை நீட்டிக்க உக்ரைன் மறுக்கும் என்றால் ஐரோப்பிய நுகர்வோர் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது.

உக்ரைன் வழியாக ரஷ்ய எரிவாயு போக்குவரத்து தொடர்பில் ஒப்பந்தமானது எதிர்வரும் டிசம்பர் 31ம் திகதியுடன் முடிவுக்கு வருகிறது. ஆனால் போர் முடிவுக்கு வராமல் ரஷ்யா உடனான எந்த ஒப்பந்தமும் நீட்டிக்க வாய்ப்பில்லை என்றே உக்ரைன் தொடர்ந்து கூறி வருகிறது.

இந்த நிலையில், ரஷ்ய செய்தித்தொடர்பாளர் Dmitry Peskov தெரிவிக்கையில், உக்ரைன் ஒப்பந்தத்தை நீட்டிக்கவில்லை என்றால் ரஷ்யாவால் மாற்று வழிகளைக் கண்டுபிடிக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உக்ரைன் மறுக்கும் என்றால் துருக்கியை நாட ரஷ்யா திட்டமிட்டுள்ளது. ஐரோப்பிய நுகர்வோருக்கு மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தவே உக்ரைன் திட்டமிட்டு வருவதாகவும் Dmitry Peskov தெரிவித்துள்ளார்.

ஆனால், உக்ரைனின் பிடிவாதத்தால் ஐரோப்பா எரிவாயுவுக்காக அதிக தொகையை செலவிட நேரிடும், மிகவும் மலிவான ரஷ்ய எரிவாயுவுக்கு பதிலாக அமெரிக்காவை நாடும் நிலை ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, உக்ரைன் வழியாக பெரும்பாலான ரஷ்ய எரிவாயு பெறுநர்கள் தெரிவிக்கையில், உக்ரைனுக்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான ஒப்பந்தம் காலாவதியாகும் போது இந்த ஆண்டின் இறுதியில் எரிவாயு வரத்து நிறுத்தப்படுவதை எதிர்கொள்ள தயாராகி வருவதாக குறிப்பிட்டுள்ளனர்.

ஆனால் ரஷ்யா மாற்று வழியாக துருக்கி, பல்கேரியா, செர்பியா அல்லது ஹங்கேரி ஆகிய நாடுகளை நாடும் என்றே கூறப்படுகிறது. இருப்பினும், இந்த வழித்தடங்களின் திறன் குறைவாக உள்ளது.

மேலும், ஐரோப்பிய ஒன்றியமும் உக்ரைனும் இந்த விவகாரத்தில் ரஷ்யா உடனான பேச்சுவார்த்தையை முன்னெடுக்க அஜர்பைஜானை கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
23 64b883bc2cf55
செய்திகள்இலங்கை

வடமேல் மாகாண மக்களுக்கு மகிழ்ச்சிச் செய்தி: ஒரு நாளில் தேசிய அடையாள அட்டை சேவை குருணாகலில் ஆரம்பம்!

வடமேல் மாகாண மக்களின் வசதி கருதி, தேசிய அடையாள அட்டையை ஒரு நாளில் வழங்கும் சேவை...

mcms
உலகம்செய்திகள்

வீரப்பன் தேடுதல் வேட்டை: பாதிக்கப்பட்ட மக்களுக்கு ₹ 2.59 கோடி இழப்பீடு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது அதிரடிப் படையால் (Special Task Force – STF) பாதிக்கப்பட்ட...

21097036 truck
செய்திகள்உலகம்

அமெரிக்காவில் கட்டாய ஆங்கிலத் தேர்வில் தோல்வி: 7,000க்கும் மேற்பட்ட பாரவூர்தி சாரதிகள் பணி நீக்கம்!

அமெரிக்காவில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பாரவூர்தி சாரதிகளைப் பாதிக்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, இந்த ஆண்டு...

539661 trisha mks
செய்திகள்இந்தியா

திரிஷா, விஷால், மணிரத்னம் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: டி.ஜி.பி. அலுவலகத்திற்கு மின்னஞ்சல் – புரளி என உறுதி!

நாடு முழுவதும் அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் மற்றும் முக்கிய நிறுவனங்களுக்குச் சமூக ஊடகங்கள் மூலம்...