4
உலகம்

ராகுல் காந்தி டி ஷர்ட்டில் உள்ள ஆங்கில வார்த்தை.., பிரச்சாரத்தில் சுவாரஸ்யம்

Share

ராகுல் காந்தி டி ஷர்ட்டில் உள்ள ஆங்கில வார்த்தை.., பிரச்சாரத்தில் சுவாரஸ்யம்

வயநாடு தேர்தல் பிரச்சாரத்தின்போது ராகுல் காந்தி அணிந்திருந்த டி ஷர்ட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்திய மாநிலமானா கேரளா, வயநாடு மக்களவை தொகுதியில் வரும் 13 -ம் திகதியில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ஏற்கனவே போட்டியிட்ட ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார்.

இந்நிலையில், வயநாடு தொகுதியில் தேர்தல் பிரச்சாரங்களை பிரியங்கா காந்தி மேற்கொண்டு வருகிறார். தொகுதி முழுவதும் சுற்றுப் பயணம் சென்று வாக்காளர்களை நேரடியாக சந்தித்து ஆதரவை திரட்டி வருகிறார்.

மேலும், பல்வேறு பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு வருகிறார். அதுமட்டுமல்லாமல், கல்லூரி மாணவ மாணவியரை சந்தித்து ஆதரவு சேகரித்து வருகிறார்.

அந்தவகையில், பிரச்சாரம் முடியவுள்ள நிலையில் சுல்தான் பத்தேரி பகுதியில் பிரியங்கா காந்தியுடன் சேர்ந்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் இன்று பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது ராகுல் காந்தி அணிந்திருந்த டீ-ஷர்ட் பின்புறம் ‘I LOVE WAYANAD’ என்று எழுதப்பட்டிருந்தது. இதனை பார்த்த மக்கள் ஆர்ப்பரித்தனர். இது தொடர்பான வீடியோவும் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...

world 219
உலகம்செய்திகள்

அமெரிக்கா – இஸ்ரேலுக்கு ஈரான் இராணுவத் தளபதி கடும் எச்சரிக்கை: கல்லறைக்கே செல்வார்கள்!

ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு முயற்சிகள் ஒருபோதும் வெற்றிபெறாது என்றும், ஈரானைப் பணியவைக்க...

world 210
உலகம்செய்திகள்

அமெரிக்கா – ஈரான் இடையே விரைவில் அமைதி ஒப்பந்தம்? டொனால்ட் டிரம்ப் நம்பிக்கை!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தைத் தணிக்கும் வகையில் லெபனானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே 10 நாள்...