4 17 scaled
உலகம்செய்திகள்

நைஜர் ராணுவ அரசுக்கு பிரான்ஸ் ஜனாதிபதியின் பதில்

Share

நைஜர் ராணுவ அரசுக்கு பிரான்ஸ் ஜனாதிபதியின் பதில்

நைஜர் நாட்டின் ராணுவ ஆட்சியாளர்கள் அழுத்தம் கொடுத்தாலும் பிரான்ஸ் தூதர் அங்குதான் தங்கியிருப்பார் என்று கூறியுள்ளார் பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவேல் மேக்ரான்.

நைஜர் நாட்டில் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள ராணுவம், கடந்த வெள்ளிக்கிழமையன்று, நைஜர் நாட்டுக்கான பிரான்ஸ் தூதர் 48 மணி நேரத்திற்குள் நாட்டை விட்டு வெளியேறவேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

பிரான்ஸ் தூதரான Sylvain Itté, நைஜரின் வெளியுறவு அமைச்சருடனான சந்திப்பிற்கான அழைப்பிற்கு பதிலளிக்க மறுத்ததால், அவரை நாட்டை விட்டு வெளியேற்ற முடிவு செய்யப்பட்டதாக ராணுவ அரசின் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

மேலும், பிரான்ஸ் அரசின் நடவடிக்கைகள், நைஜர் நாட்டின் கொள்கைகளுக்கு முரணாக அமைந்துள்ளதாகவும் அந்த அறிக்கை கூறியிருந்தது.

நைஜர் ராணுவம், ஜூலை மாதம் 26ஆம் திகதி, நாட்டின் ஜனாதிபதி Mohamed Bazoumஇன் ஆட்சியைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கூடியிருந்த பல்வேறு நாடுகளின் தூதர்களிடையே உரையாற்றிய பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், கடந்த வெள்ளிக்கிழமை நாட்டை விட்டு வெளியேற 48 மணிநேர காலக்கெடு வழங்கப்பட்ட போதிலும், நைஜருக்கானா பிரான்ஸ் தூதரான Sylvain Itte நைஜர் தலைநகரில்தான் இருப்பதாக தெரிவித்தார்.

பிரான்சும் அதன் தூதர்களும் சமீபத்திய மாதங்களில், சில நாடுகளில், குறிப்பாக சூடான் முதல் நைஜர் வரை, கடினமான சூழ்நிலைகளை எதிர்கொண்டுள்ளனர் என்று கூறிய மேக்ரான், இந்த தருணத்தில் அவர்களுக்கு எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

எங்கள் கொள்கை சரியானது என்று நான் நினைக்கிறேன் என்று கூறிய மேக்ரான். அது நைஜர் ஜனாதிபதி Bazoumஇன் தைரியத்தின் அடிப்படையிலும், சட்டத்திற்குப் புறம்பான அதிகாரிகளின் அனைத்து அறிவிப்புகளையும் மீறி, அனைத்து அழுத்தங்களையும் மீறி, நைஜரிலேயே தங்கியிருக்கும் எங்கள் தூதரின் உறுதியின் அடிப்படையிலுமானது என்று கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...