பிரித்தானியாவில் 2030ஆம் ஆண்டு நீங்கள் தூக்கிலிடப்படலாம் – எலான் மஸ்க் பதிவு
பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் பிரித்தானியாவில் நடந்து வரும் கலவரம் குறித்து பதிவிட்டுள்ளார்.
கடந்த ஒரு வார காலமாக பிரித்தானியாவில் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
பல நகரங்களில் கலவரங்கள் வெடித்ததால் அமைதியின்மை நிலவுகிறது.
ஒன்லைன் வழியாக வெறுப்பினை தூண்டியதாக கைது செய்யப்பட்ட ஜோர்டான் பார்லர் என்ற நபர் சிறைப்படுத்தப்பட்டார்.
இந்த நிலையில் பிரித்தானியாவில் நிலவும் சூழல் குறித்து டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் கருத்து பதிவிட்டுள்ளார்.
அவர் தனது எக்ஸ் தளத்தில், “பிரித்தானியாவில் 2030ஆம் ஆண்டு நீங்கள் ஒரு meme பதிவிடுவதற்காக தூக்கிலிடப்படலாம்…” என கூறியுள்ளார்.
மஸ்க்கின் இந்த பதிவிற்கு பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Comments are closed.