15 6
உலகம்செய்திகள்

பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ட்ரூடோவை கேலி செய்யும் எலான் மஸ்க்

Share

பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ட்ரூடோவை கேலி செய்யும் எலான் மஸ்க்

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதைத் தொடர்ந்து, அவரைக் கேலி செய்யும் விதத்தில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார் உலக கோடீஸ்வரர் எலான் மஸ்க்.

ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, தனது ஆதரவாளரான எலான் மஸ்குக்கு முக்கிய பொறுப்பு ஒன்றை அளித்துள்ளார்.

அதிலிருந்தே உலக அரசியல்வாதியாகிவிட்டார் எலான் மஸ்க். ஆம், உலக நாடுகளின் அரசியலில் என்ன நடந்தாலும், அதை விமர்சிப்பதே இப்போது எலான் மஸ்குக்கு முக்கிய வேலையாகிவிட்டது.

இந்நிலையில், கனடா பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதைக் கேலி செய்யும் வகையில், சமூக ஊடகமான எக்ஸில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார் எலான் மஸ்க்.

2025 அருமையாக காட்சியளிக்கிறது என்று குறிப்பிட்டுள்ள எலான் மஸ்க், ட்ரம்ப் வெற்றிபெற்றுவிட்டார், ட்ரூடோ ராஜினாமா செய்துவிட்டார், கெய்ர் ஸ்டார்மரைக் குறித்த உண்மை வெளிவந்துவிட்டது, சரியான நேரத்தில் மாபெரும் மனிதர்கள் அதிகாரத்துக்கு வருகிறார்கள், நமக்கு அவர்கள் எல்லாரும் தேவை என்று கூறி, உலக நிகழ்வுகள் பலவற்றை வரிசையாக குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே ட்ரம்ப், ட்ரூடோவை கனடாவின் ஆளுநர் என்றும், கனடாவை அமெரிக்காவின் 51ஆவது மாகாணம் என்றும் கேலி செய்துவரும் நிலையில், தற்போது எலான் மஸ்கும் தன் பங்குக்கு ட்ரூடோவை கேலி செய்துள்ளார்!

Share
தொடர்புடையது
pakistan on police attack
உலகம்

பாகிஸ்தானில் நடத்தப்பட்டுள்ள கொடூர தாக்குதல் – 11 காவல்த்துறையினர் பலி.

ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் ஹங்கு மாவட்டத்தில் அமைந்துள்ள கஸீனா பொலிஸ் சாவடியைக்...

Melania Trump
உலகம்

ஈரானின் அடுத்த இலக்கு – ட்ரம்ப் குடும்பத்திற்கு உச்ச கட்ட பாதுகாப்பு.

ஈரானின் உச்சத் தலைவர் மற்றும் மூத்த அதிகாரிகள் கொல்லப்பட்ட கூட்டுத் தாக்குதலுக்கு பின்னர், ஈரானின் முக்கிய...

European Union ggg
உலகம்உலகம்

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு கடும் எச்சரிக்கை விடுத்த டொனால்ட் ட்ரம்ப்

ஐரோப்பிய ஒன்றியம், கூகுள் நிறுவனம் தனது தேடல் முடிவுகளில் சொந்த சேவைகளுக்கு முன்னுரிமை அளித்ததாகவும், ஐரோப்பிய...

arrested woman with handcuffs
உலகம்

நேட்டோவை உளவு பார்த்த சீன பெண்!

பெல்ஜியத்தின் மான்ஸ் பகுதியில் அமைந்துள்ள ‘ஷேப்’ எனப்படும் நேட்டோ இராணுவத் தலைமையகத் தளத்தில் பயிற்சிப் பணியாளராக...