30
உலகம்செய்திகள்

14வது குழந்தைக்கு தந்தையானார் தொழிலதிபர் எலோன் மஸ்க்

Share

14வது குழந்தைக்கு தந்தையானார் தொழிலதிபர் எலோன் மஸ்க்

அமெரிக்க(us) தொழிலதிபரும், ஜனாதிபதி ட்ரம்பின் நெருங்கிய நண்பருமான எலோன் மஸ்க்(elon musk), 14வது குழந்தைக்கு தந்தையானதாக நேற்று (01)அறிவித்துள்ளார்.

‘எக்ஸ்’ சமூக வலைதளம், ஸ்பேஸ் எக்ஸ் விண்வெளி நிறுவனம் ஆகியவற்றை நடத்தி வருபவர், அமெரிக்காவைச் சேர்ந்த தொழிலதிபர் எலோன் மஸ்க்,( 53)

எலோன் மஸ்கிற்கும், அவரது முதல் மனைவி ஜஸ்டின் வில்சனுக்கும் 2002ல் ஒரு மகன் பிறந்தான். அதன்பின் இத்தம்பதிக்கு இரு பிரசவத்தில் இரட்டையர்கள் மற்றும் மூவர் என ஐந்து குழந்தைகள் பிறந்தன. 2008ல் எலோன் மஸ்க் – ஜஸ்டின் வில்சன் பிரிந்தனர்.

அதன்பின், இசையமைப்பாளர் கிரிம்ஸ் என்பவரை மணந்தார், மஸ்க். இந்த தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளன. அவரையும் பிரிந்த மஸ்க் தற்போது ஷிவான் ஜில்லிஸ் என்ற பெண்ணுடன் வசித்து வருகிறார்.

மஸ்க் – ஷிவான் தம்பதிக்கு ஸ்ட்ரைடர், அசூர், அர்காடியா என மூன்று குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் நான்காவதாக மகன் பிறந்துள்ளதாகவும், அந்த குழந்தைக்கு ஷெல்டன் லைகர்கஸ் என பெயர் வைத்துள்ளதாகவும், மஸ்கின் மனைவி எக்ஸ் தளத்தில் நேற்று பதிவிட்டார்.

இதற்கிடையே, பிரபல எழுத்தாளரும், சமூக வலைதள பிரபலமுமான ஆஸ்லே செயின்ட் கிளேர், ஐந்து மாதங்களுக்கு முன் எலோன் மஸ்கின் குழந்தையை பெற்றெடுத்ததாக அறிவித்தார். இதை எலோன் மஸ்க் மறுக்கவில்லை. அதன்படி தற்போது 14வது குழந்தைக்கு மஸ்க் தந்தையாகி உள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...