1600 லிட்டர் தாய்ப்பால் தானம்!! உதவிய சாதனை பெண்
உலகம்செய்திகள்

1600 லிட்டர் தாய்ப்பால் தானம்!! உதவிய சாதனை பெண்

Share

1600 லிட்டர் தாய்ப்பால் தானம்!! உதவிய சாதனை பெண்

குறைமாத குழந்தைகளுக்கு தாய்ப்பால் வழங்கி அமெரிக்காவை சேர்ந்த தாய் ஒருவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

அமெரிக்காவின் ஓரிகானில் உள்ள அலோஹா பகுதியை சேர்ந்த எலிசபெத் ஆண்டர்சன்-சியரா(Elisabeth Anderson-Sierra) என்ற தாய் ஒருவர் ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு தன் தாய்ப்பால் மூலம் ஊட்டம் வழங்கி வருகிறார்.

அத்துடன் குறைமாத குழந்தைகள் பலருக்கு தன்னுடைய தாய்ப்பாலை தானமாக வழங்கி உதவி வருகிறது. எலிசபெத் ஆண்டர்சன்-சியரா தாய்ப்பால்(breastmilk) வங்கிக்கு 20 பிப்ரவரி 2015 முதல் 20 ஜூன் 2018 வரையிலான காலத்திற்குள் 1.599.68 லிட்டர் தாய்ப்பாலை தானமாக வழங்கியுள்ளார்.

Elisabeth Anderson-Sierra donate 1600 ltr breastmilk: 1600 லிட்டர் தாய்ப்பாலை தானமாக வழங்கி கின்னஸ் சாதனை: பலரின் இயலாமையை உடைத்தெறிந்து உதவிய பெண்guinnessworldrecords.com

இது தனிநபர் ஒருவரால் வழங்கப்பட்ட மிகப்பெரிய தாய்ப்பால் கொடையாகும். இந்த சாதனைக்காக எலிசபெத்திற்கு கின்னஸ் சாதனையாளர் விருதும் கொடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 9 வருடங்களில் எலிசபெத், உள்ளூர் குடும்பங்கள் மற்றும் உலக அளவிலான பெறுநர்கள் என பலருக்கு இதுவரை 350,000 அவுன்ஸ்கள் தாய்ப்பாலை தானமாக வழங்கியுள்ளார்.

மேலும் தாய்ப்பால் வங்கிக்கு 2015ம் ஆண்டு முதல் 2018 ஆண்டு வரையிலான காலகட்டத்தில் தான் வழங்கிய தாய்ப்பால் அளவு மட்டுமே இதில் குறிப்பிடப்பட்டுள்ளது என எலிசபெத் குறிப்பிட்டுள்ளார்.

பால் சுரக்காதவர்கள் என அடையாளம் சூட்டப்பட்ட பல பெறுநர்களுக்கு எலிசபெத் தாய்ப்பாலை தானமாக வழங்கியுள்ளார். இவ்வாறு அடையாளம் சூட்டப்பட்ட பல்வேறு பெறுநர்களின் கதைகளில் மாற்றம் ஏற்படுத்துவதே என்னுடைய எல்லாம் ஆன எண்ணம் என்று தெரிவித்துள்ளார்.

எலிசபெத் ஆண்டர்சன்-சியரா ஹைப்பர்லாக்டேஷன் சிண்ட்ரோம்(hyperlactation syndrome) என்ற பாதிப்பு உள்ளது, இந்த பாதிப்பு காரணமாக அவருக்கு பால் உற்பத்தி அதிகரித்து தாய்ப்பால் வழிதல் ஏற்படும்.

இது தொடர்பாக எலிசபெத் பேசிய போது, என்னுடைய உடல் அதிகப்படியான ப்ரோலாக்டின் என்னும் ஹார்மோனை அதிகமாக உற்பத்தி செய்யும், இதுவே என்னுடைய அதிகமான தாய்ப்பால் சுரக்க செய்கிறது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் தாய்ப்பாலை உறிஞ்சி எடுக்க உதவும் இயந்திரமும் என்னுடைய இந்த பணியில் முக்கிய பங்கு வகித்ததாக எலிசபெத் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
22 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்திலிருந்து காணாமல் போன இரு மீனவர்கள் தமிழ்நாடு கடலோரப் பகுதியில் மீட்பு!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை ஊரணி கடற்பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போன இரண்டு...

21 4
செய்திகள்அரசியல்இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே மூன்றாவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பிரதானியும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே, உயிர்த்த...

20 3
செய்திகள்உலகம்

அஸர்பைஜான் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான நிலையம் மற்றும் பாடசாலை இலக்கு!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் அண்டை நாடுகளுக்கும் பரவி வரும் நிலையில், அஸர்பைஜானின் கட்டுப்பாட்டில்...

19 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

போலி உறுதிப்பத்திரம் தயாரித்த பெண் சட்டத்தரணிக்கு 12 ஆண்டு சிறை: கொழும்பு மேல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கொழும்பு பொரளைப் பகுதியில் உள்ள பெறுமதியான காணியொன்றுக்குப் போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பெண்...