ஜேர்மனியில் நாளையதினம் தேர்தல் நடைபெறவுள்ளது.
பிரச்சாரத்துக்கான இறுதித் தினமான இன்று, அதிபர் பதவிக்காக போட்டியிடும் அரசியல்வாதிகள் தேர்தலில் முன்னிலை பெறுவதற்கான இறுதிக்கட்ட முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதிபர் அங்கெலா மேர்க்கெலின் வலதுசாரி CDU கட்சிக்கும், சமூக ஜனநாயக கட்சிக்குமிடையில் வழமைக்கு மாறான கடும் போட்டி காணப்படுகின்றது.
இத் தேர்தலில் சமூக ஜனநாய கட்சிக்கு 26 வீத வாக்குகளும், அங்கெலா மேர்க்கெலின் CDU கட்சிக்கு 25 வீத வாக்குகளும், GREEN கட்சிக்கு 16 வீத வாக்குகளும் கிடைக்குமென கருத்துக்கணிப்புக்கள் தெரிவிக்கின்றன.
Leave a comment