90 நாட்களுக்குள் தேர்தல் – உயர் நீதிமன்றம் பணிப்பு!!

law

எதிர்வரும் 90 நாட்களுக்கு தேர்தலை நடத்துமாறு பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பஞ்சாப் மற்றும் கைபர் பக்துன்க்வா மாகாண சபைகளுக்கான தேர்தலையே 90 நாட்களுக்குள் நடத்த வேண்டுமென பாகிஸ்தான் உச்ச நீதமன்றம் தீர்ப்பளித்துள்ளார்.

நீதியரசர் உமர் அத்தா பண்டியல் தலைமையிலான ஐவர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு இன்று (01) இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

பாகிஸ்தானில் மாநிலத் தேர்தல்கள் நடத்த போதிய பணம் இல்லை என்று நிதி அமைச்சு தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்ததால், மாநிலத் தேர்தல்கள் தொடர்ந்து தாமதமாகின என்பது குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Exit mobile version