ஓட்டு போடும் போது விரலில் மை வைக்கிறீங்களா! அதன் 10 Mg விலை எவ்வளவு?

24 6608f55527e2e

ஓட்டு போடும் போது விரலில் மை வைக்கிறீங்களா! அதன் 10 Mg விலை எவ்வளவு?

தேர்தலில் வாக்கு செலுத்தும் நேரத்தில் வாக்காளர்களுக்கு விரலில் வைக்கப்படும் அழியாத மை பற்றிய தகவலை பார்க்கலாம்.

மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், வாக்காளர்களுக்கு விரலில் வைக்கப்படும் அழியாத மை பற்றிய தகவலை இங்கு பார்க்கலாம்.

இந்தியாவை பொறுத்தவரை தேர்தலின் அடையாளமாக அழியா மை உள்ளது. நாம் ஓட்டுச்சாவடிக்குள் நுழைந்ததும் வாக்காளர் பட்டியலில் நம்முடைய பெயர் இருக்கிறதா என்று சரிபார்ப்பார்கள்.

பின்னர் விரலில் அழியா மை வைக்கப்பட்டவுடன் வாக்களிக்க செல்வார்கள். வரும் மக்களவை தேர்தலிலும் இந்த நடைமுறையே பின்பற்றப்படவுள்ளது. அதாவது, தேர்தல் நேரத்தில் கள்ள ஓட்டு போடக்கூடாது என்பதற்காக அழியா மை வைக்கப்படுகிறது.

கர்நாடகாவில் உள்ள மைசூர் பெயிண்ட்ஸ் மற்றும் வார்னிஷ் லிமிடெட் (Mysore Paints and Varnish Limited or MPVI) எனும் நிறுவனம் தான் அழியாத மை-யை தயாரிக்கிறது.

இந்நிறுவனமானது 16 ஏக்கர் பரப்பளவில் மைசூரில் செயல்பட்டு வருகிறது. கடந்த 1962 -ம் ஆண்டு முதல் அழியாத மை தயாரிப்புக்கான ஒப்பந்தத்தை இந்நிறுவனம் பெற்று தயாரித்து வருகிறது.

இந்த மையில் இருக்கும் சில்வர் நைட்ரேட் சூரியஒளியுடன் வினைபுரியும் தன்மை கொண்டதால், விரலில் வைத்தவுடன் ஊதா நிறத்தில் இருக்கும் மை கருப்பு நிறமாக மாறிவிடும்.

இந்த மையானது குறைந்தது 7 நாட்கள் முதல் அதிகபட்சமாக 2 வாரங்கள் வரை விரலில் அழியாமல் இருக்கும்.

10 மில்லி கிராம் எடை கொண்ட அழியாத மை குப்பியின் (Vial) விலை இப்போது 174 ரூபாயாக உள்ளது. கடந்த தேர்தலில் இந்த குப்பியில் விலை ரூ.160 ஆக இருந்தது.

இந்த 10 மில்லிகிராம் குப்பியின் மூலம் 700 வாக்காளர்களுக்கு பயன்படுத்த முடியும். தற்போது நடைபெறவுள்ள மக்களவை தேர்தலுக்கு இந்தியாவில் 26.55 லட்சம் குப்பிகள் தேவைப்படுகின்றன. இதன் விலை மட்டும் ரூ.55 கோடியாகும்.

Exit mobile version