tamilni 156 scaled
உலகம்செய்திகள்

லொட்டரி மூலம் ரூ.200 கோடியை அள்ளிய வயதான தம்பதி.., கணிதத்தை பயன்படுத்தி புத்திசாலித்தனம்

Share

லொட்டரியில் இருக்கும் கணிதத்தை பயன்படுத்தி ரூ.200 கோடியை வயதான தம்பதியினர் வென்றுள்ளனர்.

அமெரிக்கா, மெக்சிகோ யவார்டை சேர்ந்த தம்பதியினர் ஜெர்ரி (80) மற்றும் மார்ஜ் செல்பி (81). இவர்கள் அங்குள்ள ஒரு கடையில் வேலை செய்து 60 வயதில் ஓய்வு பெற்றனர்.

இதில் மனைவி செல்பி 2003 -ம் ஆண்டு ‘வின்ஃபால்’ (Winfall) என்ற புதிய லொட்டரி சீட்டு விற்பனையை பார்த்துள்ளார். அதில் எப்படியாவது நாம் ஜாக்பாட்டை அடிக்க வேண்டும் என்றும் அவர் நினைத்துள்ளார்.

சிறு வயதில் இருந்தே கணிதத்தில் செல்பி சிறந்து விளங்கியுள்ளார். இதனால் அவரது கணிதத்தை பயன்படுத்தி லொட்டரியில் வெற்றி எண்ணை கணக்கிட்டு எப்படி பரிசு தொகை வழங்கப்படுகிறது என்பதை கண்டுபிடித்தார்.

பின்னர், மொத்தம் 1,100 டொலர்களை வைத்து 1900 டொலர்களை வெல்ல முடியும் என்பதை செல்பி உறுதிப்படுத்தினார்.

அதன்படி, முதன்முதலில் 3,600 டொலர்களுக்கு லொட்டரி டிக்கெட்டுகள் வாங்கி 6,300 டொலர்கள் வென்றார். அதே போல மீண்டும் 8,000 டொலர்களுக்கு லொட்டரி டிக்கெட்டுகள் வாங்கி 16,000 டொலர்கள் வென்றார்.

இந்த தம்பதியினர் இதோடு நிறுத்திக் கொள்ளாமல் கடந்த 9 ஆண்டுகளில் லொட்டரி மூலம் 26 மில்லியன் டொலர்கள் வென்றுள்ளனர். அதாவது இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட ரூ.200 கோடியாகும். அதாவது, இவர்களின் புத்திசாலித்தனத்தால் தற்போது கோடீஸ்வரர்களாகியுள்ளனர்.

இந்நிலையில், இந்தத் தம்பதி தொடர்ந்து வெல்வது இன்ஸ்பெக்டர் ஜெனரலின் விசாரணைக்கு வழிவகுத்தது. விசாரணையின் முடிவில் விதிகளை அவர்கள் முறையாகப் பின்பற்றியது உறுதியானதால் அவர்கள் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மேலும், இந்த தம்பதியினரின் கதையை வைத்து ‘ஜெர்ரி அண்ட் மார்ஜ் கோ லார்ஜ்’ என்ற திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...