rtjy 244 scaled
உலகம்செய்திகள்

போர் நிறுத்தத்திற்கு மத்தியிலும் தாக்குதல்: அதிகரிக்கும் பாலஸ்தீனியர்களின் பலி

Share

கடந்த 24 மணி நேரத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேல் படைகளால் 8 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தம் மூன்றாவது நாளை எட்டியுள்ள நிலையில், 13 இஸ்ரேலிய பணயக்கைதிகள், மூன்று தாய்லாந்து பிரஜைகள் மற்றும் ஒரு ரஷ்யர் ஆகியோர் செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், இஸ்ரேல் சிறையில் கடந்த 8 ஆண்டுகளாக வாடும் 39 பாலஸ்தீனியர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்றே தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகள் ஒப்படைப்பு என ஹமாஸ் படைகள் செயற்பட்டு நிலையில், ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேல் படைகளால் 8 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி ஜெனின் நகரில் ஒரே இரவில் இஸ்ரேலிய படைகள் முன்னெடுத்த தாக்குதல் சம்பவத்தில் ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

ஆகஸ்ட் மாதம் இரண்டு இஸ்ரேலியர்களைக் கொன்ற விவகாரத்தில் சந்தேகிக்கப்படும் பாலஸ்தீனியர் ஒருவரைப் பிடிப்பதற்காக தாக்குதல் நடத்துவதாக இஸ்ரேலிய இராணுவம் விளக்கமளித்துள்ளது.

இதனிடையே, கொல்லப்பட்டவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் ஜெனினில் வேலைநிறுத்தத்திற்கு பாலஸ்தீனிய பிரிவுகள் அழைப்பு விடுத்துள்ளன.

பாலஸ்தீனிய போராளிகளால் இஸ்ரேல் இராணுவம் கொடிய வன்முறை சம்பவங்களை சந்தித்த பின்னர், ஒன்றரை வருடங்களுக்கும் மேலாக மேற்குக்கரை கிட்டத்தட்ட தினசரி மோதல்களை எதிர்கொண்டு வருகிறது.

துப்பாக்கிச் சூடு மற்றும் கத்திக் குத்து தாக்குதல்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் அல்லது அத்தகைய தாக்குதல்களுக்குத் திட்டமிடுபவர்களைத் தேடி இஸ்ரேலியப் படைகள் மேற்குக் கரை நகரங்கள் மற்றும் கிராமப் பகுதிகளுக்கு அடிக்கடி கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஜெனின் நகரம் தொடர்ந்தும் இஸ்ரேலிய இராணுவத்தின் இலக்காகவே இருந்து வந்துள்ளது. இதுவரை நூற்றுக்கணக்கான பாலஸ்தீனியர்கள், பொதுமக்கள் மற்றும், போராளிகள் இப்பகுதியில் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், அக்டோபர் 7ம் திகதிக்கு பின்னர் ஜெனின் பகுதியில் 200 பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், இஸ்ரேலியர்கள் நால்வர் கொல்லப்பட்டுள்ளனர் என்றே தகவல் வெளியாகியுள்ளது.

Share
தொடர்புடையது
MediaFile 4 2
விளையாட்டுசெய்திகள்

உலகக் கிண்ணப் போட்டிகள்: இந்தியப் பிரதிநிதிக்கு விசா மறுப்பு! பங்களாதேஷின் அதிரடி முடிவால் ஐசிசி அதிர்ச்சி.

இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரை முன்னிட்டு, இந்தியா மற்றும் பங்களாதேஷ் நாடுகளுக்கு இடையே நிலவும்...

24 674091ff36e1e
செய்திகள்இலங்கை

அரச துறைக்கு 75,000 புதிய ஊழியர்கள்: ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அதிரடி அறிவிப்பு!

நாட்டின் அரச நிர்வாகக் கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில், அரச துறைக்கு புதிதாக 75,000 ஊழியர்களை இணைத்துக்கொள்ள...

1715871834 1715869628 pakis L
செய்திகள்இலங்கை

சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை: 11 ஆண்டுகளில் 46,000-க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் விசாரிக்கப்படவில்லை!

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு (National-Child-Protection-Authority) சிறுவர்களுக்கு நடந்த மோசமான செயற்பாடுகள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளில்...

iran 1
உலகம்செய்திகள்

ஈரானில் உக்கிரமடையும் மக்கள் போராட்டம்: 5,000 பேர் உயிரிழப்பு – இணையம் துண்டிப்பு, ஆயிரக்கணக்கானோர் கைது!

ஈரானில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் குழப்பங்களுக்கு எதிராக கடந்த மாதம்...