1762002 egle
உலகம்செய்திகள்

முன்கூட்டியே அணைக்கப்படும் ஈபிள் கோபுர மின் விளக்குகள்!

Share

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள உலக புகழ்பெற்ற ஈபிள் கோபுரம் ஒவ்வொரு நாளும் இரவில் மின்னொளியில் ஜொலிக்கிறது. 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒளிரும் மின் விளக்குகளால் கோபுரம் மின்னுகிறது.

உள்ளூர் நேரப்படி நள்ளிரவு 1 மணி வரை ஈபிள் கோபுரத்தில் மின்விளக்குள் ஒளிரும். அதன்பிறகு மின் விளக்குகள் அணைக்கப்படும்.

இந்த நிலையில் உக்ரைன் போர் காரணமாக ரஷியா, ஐரோப்பிய நாடுகளுக்கு எரிவாயு விநியோகத்தை நிறுத்தி வைத்துள்ளதால் பிரான்ஸ் உள்பட பல ஐரோப்பிய நாடுகளில் மின்சார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இதனை கருத்தில் கொண்டு மின்சாரத்தை சேமிக்கும் விதமாக ஈபிள் கோபுரத்தின் மின்விளக்குகளை முன்கூட்டியே அணைக்க பாரிஸ் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

அதன்படி எதிர்வரும் 23ம் திகதி முதல் உள்ளூர் நேரப்படி இரவு 11:45 மணிக்கே ஈபிள் கோபுரத்தின் மின் விளக்குகள் அணைக்கப்படும் என அந்த நகரின் மேயர் அன்னே ஹிடால்கோ கூறியுள்ளார். அதுமட்டும் இன்றி பாரிஸில் உள்ள பொதுகட்டிடங்களில் இரவு 10 மணிக்கு மின் விளக்குகள் அணைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
1 14
இலங்கைசெய்திகள்

பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்

பிரதமர் ஹரினி அமரசூரியவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக...

2 24
இலங்கைசெய்திகள்

ராஜபக்சக்கள் கொள்ளையடித்த சொத்துக்களை அரசுடமையாக்குமாறு நாமல் கோரிக்கை

ராஜபக்சக்கள் கொள்ளையடித்த சொத்துக்களை அரசுடமையாக்குமாறு ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கோரியுள்ளார்....

3 16
உலகம்செய்திகள்

போர்நிறுத்த அறிவிப்பை தொடர்ந்து மீள் எழுப்பப்படும் ஓபரேஷன் சிந்தூர் விவகாரம்.. இந்திய அரசியல் தரப்பின் கோரிக்கை

இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், மக்களவை எதிர்க்கட்சித்...

5 16
உலகம்செய்திகள்

காசாவில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை எட்டும் முயற்சி.. ஹமாஸ் விடுத்துள்ள அறிவிப்பு

காசாவில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை எட்டுவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக, இஸ்ரேலிய – அமெரிக்க பிணைக்...