6 35
உலகம்செய்திகள்

இஸ்ரேலை நாங்கள் கைப்பற்றுவோம்! எச்சரித்துள்ள எகிப்து

Share

இஸ்ரேலை நாங்கள் கைப்பற்றுவோம்! எச்சரித்துள்ள எகிப்து

அடுத்து ஏதாவது தவறு நடந்தால், இஸ்ரேலை நாங்கள் கைப்பற்றுவோம் என எகிப்து எம்பி முஸ்தபா பக்ரி(Mostafa Bakry) எச்சரித்துள்ளார்.

போர் விடயங்களில் இதுவரை தலையிடாத எகிப்து இவ்வாறு எச்சரித்திருப்பது உலக நாடுகளிடையே கவனத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 1920-1947 வரை பாலஸ்தீனத்தை பிரித்தானியா(UK) ஆட்சி செய்து வந்தது. இங்கு அரபு இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் யூதர்கள் பரவலாக இருந்தனர்.

ஒரு கட்டத்தில் யூதர்கள் தங்களுக்கு என தனி நிலம் வேண்டும் என்று பிரிவினை கோரிய நிலையில் பிரித்தானியா யூதர்களுக்கு ஆதரவளித்தது.

இதனை தொடர்ந்து 1947ல் ஐநா பாலஸ்தீனம் இரண்டாக உடைக்கப்பட்டு ஒரு பாதி யூதர்களுக்கான நாடாக இஸ்ரேல் உருவாக்கப்படும், மறுபாதி பலஸ்தீனமாக இருக்கும் என்று ஒரு ஆணையை கொண்டு வந்தது.

இதனை இஸ்ரேலும், அமெரிக்காவும், பிரிட்டனும் ஆரவாரமாக வரவேற்றன. ஆனால் எகிப்து, ஜோர்டன், ஈரான் உள்ளிட்ட நாடுகள் கடுமையாக எதிர்த்த நிலையில் போர் தொடங்கியது.

இது இஸ்ரேல்-அரபு போர் 1948இல் வெடித்தது. போரின் முடிவில் இஸ்ரேல் வெற்றி பெற்று மொத்த பாலஸ்தீனத்தில் 79% நிலத்தை கைப்பற்றியது.

ஆனால் மிக முக்கிய நகரமான வெஸ்ட் பேங்க், கிழக்கு ஜெருசேலம் ஜோர்டன் வசமும், காசா எகிப்து வசமும் வந்தது.

இதனையடுத்து 1967ல் மீண்டும் போரை தொடங்கிய இஸ்ரேல் ஜோர்டன், எகிப்து வசம் இருந்த பகுதிகளை அமெரிக்கா உதவியால் கைப்பற்றியது.

அப்போது முதல் இஸ்ரேல் சொல்வதுதான் பாலஸ்தீனத்தில் சட்டம். எதிர்த்து பேசினால் சிறை. கூட்டமாக சேர்ந்து போராடினால் தண்ணீர், உணவு, மின்சாரம் கிடைக்காது.

எனவே இந்த சூழலை மாற்ற பாலஸ்தீன விடுதலை அமைப்புகள் உருவாகின.

அவ்வாறு உருவாகிய அமைப்புகளில் ஒன்றுதான் ஹமாஸ். அரசியல் ரீதியாகவும், இராணுவ ரீதியாகவும் எல்லாவற்றிற்கும் ஹமாஸ் தன்னை தயார்படுத்திக்கொண்டது.

இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் இஸ்ரேலை ஹமாஸ் தாக்கியது.

பதிலுக்கு இஸ்ரேல் போரை நடத்தியது. இந்த போரில் 42,000க்கும் அதிகமான மக்கள் கொலை செய்யப்பட்டனர். இந்நிலையில் அமெரிக்காவின் தலையீட்டால் போர் முடிவுக்கு வந்தது.

இப்போது இரு பக்கத்திலும் கைதிகளின் பரிமாற்றம் நடைபெற்று வருகிறது. ஆனால் இஸ்ரேல் ஹமாஸ் அழிக்கப்பட வேண்டிய ஒன்று என்று கூறி வருகிறது.

இந்த நிலையிலேயே, எகிப்து எம்பி முஸ்தஃபா இஸ்ரேலுக்கு வெளிப்படையாக எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

இஸ்ரேல் சிறிய தவறு செய்தால் கூட, அடுத்த நொடியே டெல் அவிவ்வை நாங்கள் கைப்பற்றிவிடுவோம் என்று கூறியுள்ளார்.

பாலஸ்தீனத்திற்கு ஆதரவானதாக இப்படி சொல்லவில்லை. எகிப்தை இஸ்ரேல் தாக்க நினைத்தால் பதிலடி இவ்வாறு இருக்கும் என்று கூறியிருப்பதாக ரஷ்ய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Share
தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...