பிரான்ஸ் நாட்டின் அதிபர் இம்மானுவல் மக்ரோன் மீது முட்டை வீச்சு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இவர் Lyon நகருக்கு பயணமாகியிருந்தார். அங்கு நடைபெற்ற உணவகம் மற்றும் உணவு வர்த்தக கண்காட்சியை பார்வையிடுவதற்கு சென்ற நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது .
இந்த சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளையில் கடந்த ஜூன் மாதம் 08 ஆம் திகதி வலென்ஸின் நகர மையத்தில் பார்வையாளர்களை சந்தித்த போது அதிபர் இமானுவேல் மக்ரனை நபரொருவர் கன்னத்தில் அறைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment