ஈக்வடோர் சிறையில் கலவரம் 31 கைதிகள் பலி
உலகம்செய்திகள்

ஈக்வடோர் சிறையில் கலவரம் 31 கைதிகள் பலி

Share

ஈக்வடோர் சிறையில் கலவரம் 31 கைதிகள் பலி

தென் அமெரிக்கா நாடான ஈக்வடோரில் சிறையொன்றில் ஏற்பட்ட கலவரத்தில் 31 கைதிகள் உயிரிழந்தனர்.

இந்த நாட்டின் குவாயாகில் நகரில் மத்திய சிறைச்சாலை அமைந்துள்ளது. இங்கு சிறைக் கைதிகள் அதிக அளவில் அடைக்கப்பட்டுள்ளனர். சமூகவிரோத கும்பல் இருதரப்பாக பிரிந்து இருந்து இந்த சிறையில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.

இந்த நிலையில் அது எல்லை மீறி அதிகார போட்டியாக உருமாறி மோதல் வெடித்து கலவரமானது. கத்தி, கடப்பாரை உள்ளிட்ட கையில் கிடைக்கும் பொருட்களை ஏந்தி ஆக்ரோஷமான முறையில் கைதிகள் இரு கோஷ்டிகளாக பிரிந்து சண்டையிட்டு கொண்டனர்.

இதனால் காவல்துறையினர் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தனர். சிறைத்துறை அதிகாரிகள் இராணுவத்தின் உதவியை நாடினர். அதன்படி கலவரத்தை ஒடுக்க சம்பவ இடத்திற்கு இராணுவத்தினர் விரைந்தனர்.

அவர்கள் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் கலவரத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். எனினும் இந்த கலவரத்தில் 31 சிறை கைதிகள் கொல்லப்பட்டனர்.

மேலும் காவல்துறையினர் உட்பட நூற்றுக்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர். கலவரத்தை பயன்படுத்தி கைதிகள் சிலர் தப்பியோடி உள்ளனர். அவர்களை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகிறார்கள்.

சேதம் அடைந்த சிறை அறைகள், வளாகங்கள், சிறைச்சாலை உபகரணங்கள் ஆகியவற்றை திருத்தும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.

கடந்த செப்டெம்பர் மாதம் சிறையில் இடம்பெற்ற கலவரத்தில் 119 பேர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
5 1
உலகம்செய்திகள்

காசா மீது வீசப்பட்ட 230 கிலோ குண்டு! இஸ்ரேலின் போர்க்குற்றம் அம்பலம்

காசாவில் பிரபல கடற்கரை விடுதி ஒன்றில் இஸ்ரேல் MK-82 என்ற 230 கிலோ எடை கொண்ட...

4 1
இலங்கைசெய்திகள்

செம்மணியில் கொடூரமாக கொன்று புதைக்கப்பட்ட பிஞ்சு குழந்தைகள்: அரசு தரப்பின் அதிரடி அறிவிப்பு

செம்மணி – சித்துபாத்தி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் வழக்கு விசாரணைகளுக்கு அரசாங்கத்தின் சார்பில்...

1
உலகம்செய்திகள்

செம்மணி மனித புதைகுழி விவகாரம் : கனடாவில் இருந்து வந்த கோரிக்கை

செம்மணி மனித புதைகுழியில் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளமை தமிழ் இனப்படுகொலை இடம்பெற்றது என்பதை சர்வதேசம் அங்கீகரிக்கவேண்டும், பொறுப்புக்கூறல்...

3 1
உலகம்செய்திகள்

செம்மணி விவகாரத்திற்கு சர்வதேச விசாரணை வேண்டும்.. பிரித்தானிய எம்பி கோரிக்கை

கிருஷாந்தி குமாரசாமியின் படுகொலை விடயத்தில் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்பட்டது போல் செம்மணி மனித புதைகுழியுடன் தொடர்புடையவர்களை கண்டறிய...