8 scaled
உலகம்செய்திகள்

கொத்தாக கொல்லப்பட்ட பலர்… வெறிச்சோடிய நகரம்: அவசர நிலை பிரகடனம்

Share

தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் குற்றவியல் குழுக்களின் சண்டை காரணமாக 16 பேர் கொல்லப்பட்ட நிலையில், முதன்மையான நகரமொன்று வெறிச்சோடி காணப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுமார் 3 மில்லியன் மக்கள் குடியிருக்கும் துறைமுக நகரமான Guayaquil வியாழனன்று மயான அமைதியுடன் காணப்பட்டுள்ளது. நெருப்பு வைத்தல், கார் வெடிகுண்டு தாக்குதல், துப்பாக்கிச் சூடு மற்றும் சிறையில் மூண்ட கலவரம் என நாட்டின் பல பகுதிகளில் மொத்தமாக 16 பேர்கள் ஒரே நாளில் கொல்லப்பட்டுள்ளனர்.

பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் அரசு அலுவலகங்களும் மூடப்பட்டுள்ளது. நகரின் பெரும்பாலான சாலைகள் வாகன நெரிசலில் பொதுவாக ஸ்தம்பிக்கும் சூழலில், வியாழக்கிழமை வெறிச்சோடி காணப்பட்டுள்ளது.

வன்முறைக்குப் பதிலளிக்கும் வகையில் நாடு முழுவதும் இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தாலும் பெரும்பாலான கடைகள் மற்றும் வணிகங்கள் மூடப்பட்டிருந்தன.

செவ்வாய்க்கிழமை TC தொலைக்காட்சி நிறுவனத்திற்குள் புகுந்த ஆயுததாரிகள் ஊடகவியலாளர் ஒருவரை நேரலையில் சிறை பிடித்தனர். இந்த சம்பவத்தை அடுத்தே சமீபத்தில் பொறுப்புக்கு வந்த ஜனாதிபதி Daniel Noboa, உள்நாட்டு ஆயுத மோதல் நிலையை பிரகடனம் செய்தார்.

நாங்கள் ஒரு போர் நிலையில் இருக்கிறோம், இந்த பயங்கரவாதிகளுக்கு அடிபணிய முடியாது என்று ஜனாதிபதி நோபோ புதன்கிழமை கூறினார். மட்டுமின்றி, ஈக்வடாரின் வீதிகள் மற்றும் சிறைச்சாலைகளின் கட்டுப்பாட்டை மீளப்பெற பாதுகாப்புப் படையினர் போராடி வரும் நிலையில்,

178 காவலர்கள் மற்றும் சிறை ஊழியர்கள் இன்னும் மெக்சிகன் போதைப்பொருள் விற்பனையாளர்களுடன் தொடர்பு கொண்ட கும்பல்களால் பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தரப்பு தெரிவித்துள்ளது.

இதனிடையே, குவாயாகில் பகுதியில் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், படிப்படியாக துறைமுக நகரம் இயல்பு நிலைக்குத் திரும்புவதாகவும் கடற்படை செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 35
செய்திகள்இலங்கை

ஓய்வுக்காலத்தின் சொர்க்கபுரி இலங்கை! – 2026-இல் உலகின் மிக மலிவான நாடாக முதலிடம்; ‘Travel + Leisure’ புகழாரம்!

உலகின் முன்னணி பயண மற்றும் வாழ்க்கைமுறை சஞ்சிகையான ‘Travel + Leisure’, 2026-ஆம் ஆண்டில் ஓய்வுபெற்ற...

image 1200x800 34
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சட்டத்தரணி படுகொலை வழக்கு: கைது செய்யப்பட்ட சகோதரர்களுக்கு நாளை வரை தடுப்புக்காவல்! – கடுவலை நீதிமன்றம் உத்தரவு!

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி புத்திக மல்லவஆராச்சி மற்றும் அவரது மனைவியை சுட்டுக் கொலை செய்த சம்பவத்திற்கு...

image 1200x800 37
உலகம்செய்திகள்

அமெரிக்க ஹொக்கி மைதானத்தில் துப்பாக்கிச் சூடு: மூவர் பலி! – குடும்பத் தகராறால் நேர்ந்த கொடூரம்!

அமெரிக்காவின் ரோட் ஐலண்ட் (Rhode Island) பகுதியில் உள்ள ஹொக்கி மைதானம் ஒன்றில் அரங்கேறிய துப்பாக்கிச்...

image 1200x800 36
செய்திகள்உலகம்

இம்ரான் கானைக் காப்பாற்ற ஒன்று திரண்ட கிரிக்கெட் நட்சத்திரங்கள்! – கவாஸ்கர், கபில் தேவ் உட்பட 14 ஜாம்பவான்கள் பாகிஸ்தான் பிரதமருக்குக் கடிதம்!

பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அந்நாட்டின் முன்னாள் பிரதமரும், 1992-ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வென்று கொடுத்த...